சென்னை, ஏப். 12- டி.ஆர்.பாலுவுக்கும், திமுக கூட்டணிக்கும் போடும் ஓட்டு இந்திய ஜன நாயகத்தை காப்பாற்ற போடும் ஓட்டு என்று விடு தலை நாளிதழ் ஆசிரியரும் திராவிடர் கழக தலைவரு மான கி.வீரமணி தெரிவித் தார். திருப்பெரும்புதூர் மக்களைவைத் தொகுதி யில் போடியிடும் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து அம்பத்தூர் கொரட்டூரில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு ஆசிரியர் கி.வீரமணி பேசுகையில், தமிழ்நாட்டில் மட்டுமல்ல, வட மாநிலங் களிலும் பா.ஜ.க. அரசை அகற்றத் தயாராகி விட்டார்கள். இதைப் பற்றியெல்லாம் கவலைப் படாமல் பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு 7ஆவது முறையாக வந்து, “கேரண்ட்டி” என்கிறார். இதற்கு முன்னால் கொடுத்த “கேரண்ட் டி” என்னாயிற்று? என்று கேள்வி எழுப்பினார். குடியரசுத்தலைவரை அவமதித்த மோடி “நாரி சக்தி” என்று பெண்களை போற்றுவதாக கூறும் பிரதமர், அத்வானி யின் வீட்டிற்குச் சென்று ‘பாரத ரத்னா’ விருது வழங் கும் நிகழ்ச்சியில், குடியர சுத் தலைவர் திரவுபதி முர்முவை நிற்க வைத்து விட்டு மோடி அமர்ந்திருந் தது ஏன்? இதுதான் மகளிரை மதிக்கும் மாண்பா? குடியரசுத் தலைவருக்கு அளிக்கும் ‘புரொட்டக் காலை’ தூக்கி எறிந்து விட்டு, இந்தியாவின் குடியர சுத் தலைவராக இருக்கக் கூடியவர் பழங்குடி இனத் தைச் சேர்ந்த பெண் என்பதால்தானே இப்படி அவமதிப்பு செய்துள்ளார் கள். ஒன்றிய அரசின் ஓரவஞ் சனை ஒன்றிய அரசு தமிழ் நாட்டிற்கு தர வேண்டிய நிதியை தராமல் ஓரவஞ் சனை செய்கிறது. மழை மற்றும் பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது தேசிய பேரிடரிலிருந்து நிவாரண நிதி வராத நிலையிலும் தமிழ்நாடு அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல் படுத்தி வருகிறது. ஒன்றிய அரசு சொன்ன வாக்குறுதி எதையும் நிறைவேற்ற வில்லை, வேலைவாய்ப்பு எதையும் உருவாக்க வில்லை, லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் சேது சமுத்தி ரத் திட்டத்தை நடைமுறைப் படுத்த வில்லை, பொய்த் தொழிற்சாலைகள், ஊழல்வாதிகளை தப்பிக்க வைக்க சுத்திகரிப்புத் தொழிற்சாலைகள் நடத்து கிறார்கள். உதய சூரியனை ஆதரிப்பீர் இதையெல்லாம் மாற்ற வேண்டுமானால் இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும். அதற்கு நீங்கள் தி.மு.க. சார்பில் போட்டியி டும் இந்தியா கூட்டணி வேட்பாளர் டி.ஆர்.பாலுவுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து அதிக வாக்குகள் வித்தி யாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். நீங்கள் டி.ஆர்.பாலுவுக்கு போடும் ஓட்டு இந்தியாவின் ஜனநாயகத்தை காப்பாற்று வதற்காக போடும் ஓட்டு. எனவே டி.ஆர்.பாலுவுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரி யான வாக்கு வித்தியாசத் தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஆவடி மாவட்டத் தலைவர் வெ.கார்வேந்தன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பொதுச்செயலா ளர் வீ.அன்புராஜ், துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், தலை மைக்கழக அமைப்பாளர் கள் வி.பன்னீர்செல்வம், தே.செ.கோபால், மதிமுக கொள்கை விளக்க அணிச் செயலாளர் ஆ.வந்தியத் தேவன், சட்டமன்ற உறுப்பி னர் ஜோசப் சாமுவேல், தொகுதி பொறுப்பாளர் செல்வராஜ், மண்டலக்குழு தலைவர் பி.கே.மூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொகுதி பொறுப் பாளர் சு.லெனின் சுந்தர், சிபிஎம் தொகுதி பொறுப் பாளர் பா.கருணாநிதி, மதிமுக மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன், முஸ்லீம் லீக் மாவட்டத் தலைவர் இஸ்மாயில், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவா் அப்துல் காதர், மக்கள் நீதி மய்யம் மாவட்ட துணைச் செயலாளர் தனபாலன், காங்கிரஸ் தொகுதி பொறுப்பாளர் ரோமியோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.