districts

img

வேளச்சேரியில் உள்ள 9 மாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து

சென்னை,செப்.13- சென்னை வேளச்சேரி ரயில் நிலையம் அருகே பிரதான  சாலையில் உள்ள 9 மாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து  ஏற்பட்டது. அங்கு, 9 மாடி கட்டடம் புதிதாக கட்டப்பட்டு வரும் நிலையில் தீ விபத்து ஏற்பட்டது. பயங்கர தீ விபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் கடும்  புகை மூட்டம்  காணப்பட்டது. இதனால், பொது மக்களும்,  வாகன ஓட்டிகளும் அச்சமடைந்தனர். தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்திற்கு பின்புறம் குடியிருப்புகள் இருப்பதால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர். தீ விபத்து  எதிரொலியால் அப்பகுதி வழியாக செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.  சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதன் எதிரொலியால், கட்டு மான தொழிலாளர்கள் அருகில் உள்ளவர்கள் பாதுகாப்பாக  வெளியேறும்படி அறிவிறுத்தினர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.