districts

நான் முதல்வன் என்ற திட்டத்தின் மூலம் மாநில அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது

திருவண்ணாமலை,ஜூலை 27-

      திருவண்ணாமலை எஸ்.கே.பி பொறியியல் கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை.28)  தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் எஸ்.கே.பி பொறியியல் கல்லூரியும் இணைந்து “நான் முதல்வன்” என்ற திட்டத்தின் மூலம் மாநில அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இதில் சுமார் 40 க்கும் மேற்பட்ட மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் பங்கு பெறுகின்றன. இதில் சுமார் ஆயிரம் மாணவர்கள் தங்கள் வருகையை பதிவு செய்திருக்கிறார்கள். மேலும் ஆறு மாவட்டங்களை சார்ந்த பொறியியல், கலை, அறிவியல், பாலிடெக்னிக், ஐடிஐ, முடித்தவர்களுக்கு பங்கு பெறுகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை எஸ்கேபி கல்விக் குழுமம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் செய்துள்ளது.