districts

பாலியல் குற்றவாளி கைது செய்யப்படுவார்

சென்னை, ஜூலை 10 -

    பாலியல் புகாரில் படூர் பாலுவை விரைவில் கைது செய்வோம் என்று தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ், சிபிஎம் தலைவர்களிடம் உறுதியளித்துள்ளார்.

    செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டம், கேளம்பாக்கம் அடுத்த தையூர் - கோமா நகரில் மர  வியாபாரி படூர் பாலு-விடம் கொத்தடி மைகளாக இருந்த பழங்குடி சமூகத்தை சேர்ந்த 10 ஆண்கள், 10  பெண்கள் ஏப்.28 அன்று மீட்கப்பட்ட னர்.

   இதில், ஒரு 22 வயதுள்ள பெண், தன்னை படூர் பாலு பாலியல் வல்லுறவு  செய்ததாக ஜூன் 6 அன்றும், மேலும் 5 பெண்கள் ஜூன் 23 அன்றும் கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் பதிவு தபால் வாயிலாக புகார் அனுப்பி யுள்ளனர். இந்நிலையில் அவர்களை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் பாதுகாத்து வருகின்றனர்.

    ஜூன் 6 அன்று கொடுத்த புகார்  மீது ஜூன் 10 அன்று காவல்துறை வழக்கு பதிவு செய்து, பாதிக்கப் பட்டவர்களிடம் இருந்து 325 வாக்கு  மூலங்கள் பெறப்பட்டது. இருப்பினும், குற்றவாளி கைது செய்யவில்லை.

     இதுதொடர்பாக தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜை திங்களன்று (ஜூலை 10) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பெ.சண்முகம் தலைமையில் செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர் ப.சு.பாரதி அண்ணா, செயற்குழு உறுப்பினர்கள் சேஷாத்திரி, தமிழரசி,  ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் ஜி.ஜெயந்தி,  தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலா ளர் க.புருஷோத்தமன், மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட பொரு ளாளர் சுப்பிரமணி மற்றும் பாதிக்கப் பட்ட பெண்கள் சந்தித்து முறை யிட்டனர்.

    அப்போது அளிக்கப்பட்ட மனு வில், பாதிக்கப் பட்ட பெண்கள் தனித்  தனியாக புகார் கொடுத்துள்ளனர். அதன்பேரில் தனித்தனி வழக்குகள் பதிவு செய்ய வேண்டும். ஜூன் 6  அன்று அளிக்கப்பட்ட புகாரில் “பாலி யல் வல்லுறவு செய்தார்” என குறிப் பிட்டுள்ளார். அதன்பேரில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை யில் மிக காலதாமதமாக ஜூன் 22 அன்று இந்தியதண்டனை சட்டப்பிரிவு 376ல் சேர்க்கப்பட்டுள்ளது. குற்ற வாளி ஜூன் 15 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனு செய்துள்ளார். அப்போது  அரசு தரப்பில் இருந்து இ.த.ச. பிரிவு 376 குறித்து எதுவும் பேசவில்லை.

    பாலியல் குற்றவாளியை விரைந்து கைது செய்யவில்லையெனில் சாட்சி யங்களை மிரட்டக் கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே, குற்ற வாளியை விரைந்து கைது செய்து, நீதிமன்ற காவலில் விசாரிக்க வேண்டும்  என்று கோரப்பட்டிருந்தது.

    இதற்கு பதிலளித்த ஆணையர், குற்றவாளியை காப்பாற்றும் எண்ணம் காவல்துறைக்கு இல்லை.  ஒவ்வொரு புகார் மீதும் தனித்தனியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய் யப்படும். குற்றவாளியை விரைந்து கைது செய்வோம் என்று உறுதி யளித்தார்.