districts

img

அறிவியல் புனைகதைக்கு ஏனிந்தப் பெயர்

     ஜி.வி. பிரகாஷ் - கௌரி கிஷன் நடிப்பில், விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் வெளிவர இருக்கும் புதிய தமிழ்ப்படத்தின் பெயர் ‘அடியே’. இயக்குநர் வெங்கட் பிரபு, மதுமகேஷ், ஆர்ஜே விஜய் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்தப் படத்தை மாலி அன்ட் மான்வி மூவி மேக்கர்ஸ் சார்பாக பிரபா பிரேம்குமார் தயாரித்துள்ளாராம். இதுவொரு அறிவியல் புனைகதை என்கிறார்கள்.  

     வழக்கமான திரைப்படமாக அல்லாமல் முற்றிலும் மாறுபட்டதொரு படம் என்கிறார்கள்.  

    ரசிகர்கள் இதனை வெகுவாக வரவேற்பார்கள் என்கிற படக்குழுவினர் இதற்கு இப்படியொரு பெயரை வழக்க மான பழமைச் சிந்தனை தொனிக்கும் படி வைத்திருப்பதுதான் ஏன் என்று தெரியவில்லை. அறிவியல் புனைகதையைத் திரைப்படமாக்கும் புதுமை விரும்பிகளுக்கும் பெண்ணைத் தாழ்வாக விளிக்கும் அடியே போன்ற சொற்களை ஐயுற -  சந்தேகங்கொள்ளத் தெரியவில்லையே!