districts

img

தமிழகத்தில் 7 நாட்களுக்கு மழை வாய்ப்பு

சென்னை, மே 18 - கோடை வெப்பத்தால் கடந்த இரு  மாதங்களாக தமிழக மக்கள் அவ திப்பட்டு வந்த நிலையில், கடந்த சில  தினங்களாக வளி மண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தென்மேற்கு வங்கக் கடலில் 22-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாகவும், இதனால், மே 19 முதல் 21 வரை தமிழ்நாட்டில் மிக மிக  கனமழை பெய்யும் என்று, சென்னை வானிலை ஆய்வு மையம், ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது.  மேலும் தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், 5 நாட்களுக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ள தாகவும் மே 22-ல் மிக கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்நிலையில், மே 19 முதலே தென்மேற்கு பருவமழையும் துவங்க வுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.  வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் துவங்கும் தென்மேற்குப் பருவ மழை, இந்தாண்டு முன்கூட்டியே துவங்குவதாகவும் வானிலை மையம் கணித்துள்ளது.

;