districts

img

பூங்கா அமைக்கும் இடத்தில் குப்பை கிடங்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி எதிர்ப்பு

ராணிப்பேட்டை, செப். 30 -  ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக ளுக்காக போராடிய கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தான தலைவர் சீனிவாச ராவ் நினைவு தினத்தில், ஆற்காடு நகராட்சி 7ஆவது வார்டு bஜயராம் நகர் பகுதியில் அமைந்துள்ள குப்பை கிடங்கை அகற்ற கோரி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் சனிக்கிழமை (செப். 30) அன்று மாவட்டத் தலைவர் பி. ரகுபதி தலைமையில் குப்பை கிடங்கு அகற்றும் போராட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட துணைச் செய லாளர் பி. மோகன், சிஐடியு ஆட்டோ சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி. மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சி யின் ஆற்காடு தாலுகா செயலாளர் எஸ். செல்வம், கன்னியப்பன், சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எபிஎம். சீனிவாசன், ஆற்காடு நகர காங்கிரஸ் தலைவர் எஸ். பியாரே ஜான், விவசாய தொழிலாளர் சங்கம் மாவட்ட தலைவர் டி. சந்திரன், விவசாய சங்க மாவட்ட தலைவர் எஸ். கிட்டு, வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் மா. கோவலன் ஆகியோர்  உரையாற்றினர்.  அரசு போக்குவரத்து சங்கம் மண்டல செயலாளர் கே. ரவிச்சந்திரன், கட்டுமான சங்க மாவட்ட தலைவர் என். ரமேஷ், மலை சங்கம் குமார், ஆட்டோ சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பாபு, பொருளாளர் கே. ரமேஷ், தென்னரசு உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். இதையடுத்து ஆற்காடு நகராட்சி ஆணையாளர் கி.சு. கிருஷ்ணா ராம், பொறியாளர் எழிலரசன் சங்கத் தலை வர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, 3 மாதத்திற்குள் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி யளித்தனர்.