கள்ளக்குறிச்சி,ஜூலை 10-
கள்ளக்குறிச்சி உழவர் சந்தையில் தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறை சார்பில் குறைந்த விலையில் தக்காளி விற்பனையை ஆட்சியர் ஷ்ரவன்குமார் தொடங்கி வைத்தார்.
கடந்த சில நாட்களாகவே தக்காளி விலை ஏற்றம் அடைந்து வருகிறது. பொது மக்களுக்கு குறைந்த விலையில் வழங்க கூட்டுறவு துறை மற்றும் வேளாண் துறை அலுவலர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். அதனடிப்படையில், ஒரு கிலோ தக்காளி 80 ரூபாயுக்கு விற்பனை செய்யப்பட்டது.
தோட்டக்கலை மற்றும் மலைபயிர்கள் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள விற்பனை நிலையங்களில் நபர் ஒருவருக்கு ஒரு தக்காளி குறைந்த விலைக்கு வழங்கப்படுகிறது.