தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள தொழிலாளர் நலச் சட்டத் திருத்ததை திரும்பப்பெற வலியுறுத்தி சிதம்பரம் கஞ்சி தொட்டி முனையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகரச் செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி ரமேஷ்பாபு, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நல குழு மாநில துணைத் தலைவர் மூசா, நகர்மன்ற துணைத் தலைவர் முத்துக்குமரன் உள்ளிட்ட பலர் பேசினர். இதேபோல் விருத்தாசலத்தில் சிபிஎம், சிபிஐ, விசிக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.