districts

மாடியில் இருந்து விழுந்து குழந்தை பலி

சென்னை,ஜூலை 6-

     மாதவரம் நேருநகர், பெருமாள் கோவில் தெரு வில் உள்ள வீட்டின் 3-வது மாடியில் மேல் தளத்தில் வசித்து வருபவர் ராகுல். இவரது மனைவி பூஜா. இவர்களது மகன்கள் பருண், சியோன் (வயது2). பீகார் மாநிலத்தை சேர்ந்த  இவர்கள் கடந்த 6 மாதத் திற்கு முன்பு இங்கு வந்து தங்கினர். இந்நிலையில் புதனன்று பூஜா வீட்டின் மாடியில் துணிகளை துவைத்துகொண்டிருந்த போது  குழந்தைகள் பருண், சியோன் அகியோர் விளை யாடிக் கொண்டிருந்தனர். அப்போது மொட்டை மாடியில் தடுப்பு கைப்பிடி சுவரில் இருந்த இடைவெளி வழியாக 2-வது குழந்தை சியோன் வெளியே வந்தபோது மாடி யிலிருந்து  தவறி கிழே விழுந்து இறந்தது.