districts

இன்று 9 மின்சார ரயில்கள் ரத்து

சென்னை,ஆக.22-

      தெற்கு ரயில்வே சார்பில்  வெளியிட்டுள்ள செய்தி  குறிப்பில் கூறியிருப்பதா வது:- அரக்கோணம் ரயில்வே யார்டில் பரா மரிப்பு பணிகள் நடைபெற இருக்கும் காரணத்தால் புதன் (ஆக.23) மற்றும் 30-ந்தேதி காலை 10 மணி  முதல் பிற்பகல் 1.30 மணி வரை சென்னை சென்ட்ரல் -அரக்கோணம் இடையே இயங்கும் 9 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன. இதற்கு மாற்றாக பயணிகளின் வசதிக்கேற்ப குறிப்பிட்ட தேதிகளில் 9 பயணிகள் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. சென்னை சென்ட்ரல் புறநகர்- கடம்பத்தூர் இடையே சிறப்பு ரயில்கள் காலை 8.20 மணிக்கும், காலை 11 மணிக்கும் இயக்கப்படும். மறுமார்க்கமாக கடம்பத்தூர்-சென்னை சென்ட்ரல் புறநகர் இடையே சிறப்பு ரயில்கள் காலை 10.25, 11.35, பிற்பகல்  1.25 மணிக்கு இயக்கப்படும்.