districts

7 டன் ரேசன் அரிசி பறிமுதல்

காஞ்சிபுரம், ஜூலை 2-  

    காஞ்சிபுரத்தை அடுத்த கீழம்பி பகுதி யில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து காவல்துறையினர் காஞ்சி புரம் சிறப்பு வட்டாட்சியர் இந்துமதி ஆகி யோர் இணைந்து காஞ்சிபுரம் அருகே கீழம்பி பகுதியில் சோதனை மேற்கொண்ட னர். அப்போது காஞ்சிபுரம் - வேலூர் சாலை யில் கீழம்பி என்ற இடத்தில் 2 பேர் ஒரு வாகனத்தில் இருந்து மற்றொரு வாக னத்திற்கு ரேசன் அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டிருந்தனர். அவர்கள் போலீ சாரை கண்டதும் தப்பி ஓடி விட்டனர். போலீ சார் உடனடியாக லாரிகளை சோதனை செய்ததில் 7 டன் 950 கிலோ எடையுள்ள ரேசன் அரிசி மூட்டைகளை கைப்பற்றினர். பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசியை ஸ்ரீபெரும்புதூர் நுகர் பொருள் வழங்கல் வாணிப கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.  

    இது சம்பந்தமாக காஞ்சிபுரம் வெள்ளை கேட் அருகே நின்றுகொண்டு இருந்த சிறுகாவேரிப்பாக்கத்தை சேர்ந்த முரளி (31), கரண் (24) ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து நீதி மன்றத்தில்ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

;