செங்கல்பட்டு, மே 20- செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் சிங்கபெரு மாள்கோவில் இடைப்பட்ட பகுதியில் ஒரே தண்ட வாளத்தில் அடுத்தடுத்த நான்கு மின்சார ரயில்கள் ஒன்றன் பின் ஒன்றாக நிறுத்தப்பட்டதால் ரயிலில் இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். செங்கல்பட்டில் இருந்து நாள்தோறும் சென்னைக்கு 30க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து கட்டண குறைவு பாதுகாப்பு கருதி நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் பணிக்கு செல்வது, பள்ளி கல்லூரிகளுக்கு செல்வது என மின்சார ரயில்களை காலை மற்றும் மாலை வேளைகளில் பயன்படுத்து கின்றனர். தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக பல மாவட்டங்க ளில் மழை பெய்து வரும் நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் திங்களன்று (மே 20) அதிகாலை முதல் லேசான சாரல் மழை பெய்தது. இதன் எதிரொலி யாக சிங்க பெருமாள் கோவில் மறைமலைநகர் இடையே திடீரென சிக்னல் கோளாறு ஏற்பட்டது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மின்சார ரயில் அங்கங்கே நிறுத்தபட்டது. மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு சிக்னல் கோளாறு சரி செய்த பிறகு ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டது ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். செங்கல்பட்டு தாம்பரம் இடையே 3 ரயில் பாதைகள் இருப்பதால் சிக்னல் கோளாறு காரணமாக விரைவு ரயில் தாமதமாக செல்லக் கூடாது என்பதற் காகவே மின்சார ரயில்கள் தாம்பரம், செங்கல்பட்டு மார்க்கமாக ஒரே தண்ட வாளத்தில் அடுத்தடுத்து 4 ரயில்கள் 20 மீட்டர் இடை வெளியில் நிறுத்தப்பட்டி ருந்தது தெரிவிக்கப்பட்டது. மேலும் ஒரே தண்டவாளத் தில் எதிரெதிரே இரண்டு ரயில்கள் வந்ததால் ரயில் பயணிகள் அச்சத்துக்கு உள்ளாகினர். வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை சிக்கனல் கோளாறு ஏற்பட்டதின் காரணமாக வேலைக்கு செல்பவர் தாமதமாக செல்ல வேண்டிய நிலை உருவா னது. இதனால் ரயில் பயணி கள் கடும் பாதிப்புக்குள்ளா கினர்.