districts

img

3வது நாள் காத்திருப்பு போராட்டம்

ரேசன் கடைகளை திறந்து அத்தியாவசிய பொருட்கள் வழங்கக்கோரி புதுச்சேரி குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அலுவலகம் அருகில் நடைபெற்று வரும் 3வது நாள்  காத்திருப்பு போராட்டத்திற்கு, மார்க்சிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மண்ணாடிப்பட்டு கமிட்டி செயலாளர் இரகு.அன்புமணி தலைமை தாங்கினார்.  திமுக மாநில அமைப்பாளர், எதிர்கட்சித் தலைவர் ஆர்.சிவா போராட்டத்தை வாழ்த்தி பேசினர்.சிபிஎம் மாநில செயலாளர் ஆர்.ராஜாங்கம், மூத்த தலைவர்கள் சுதா சுந்தரராமன், முருகன், மாநில  செயற்குழு உறுப்பினர்கள் பெருமாள், ராமச்சந்திரன் உட்பட    திரளானோர்  இதில் பங்கேற்றுள்ளனர்.