செங்கல்பட்டு, ஆக.27- சென்னையில் நடை பெறவிருக்கும் சனாதான ஒழிப்பு மாநாட்டில் ஏற்றப்பட இருக்கும் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் நினைவு ஜோதி பயணம் அவரது நினைவிடத்தில் இருந்து தொடங்கியது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் வரு கிற செப்டம்பர் மாதம் 2ம் தேதி சென்னையில் சனாதன ஒழிப்பு மாநாடு தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் இந்தியா முழுவதிலும் இருந்து எழுத்தாளர்கள், கலைஞர்கள், அறிஞர்கள், வெகு மக்கள் திரளாக கலந்து கொள்ள உள்ளனர். இம்மாநாட்டில் ஏற்றப்பட இருக்கும் சனாதன ஒழிப்பு போராளியும்,சமத்துவ போராளியுமான தாத்தா ரெட்டமலை சீனிவாசன் நினைவு ஜோதி பயண துவக்க விழா அவர் வாழ்ந்த செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் ஒன்றியம் கோழியாலம் கிராமத்தில் உள்ள தாத்தா ரெட்டைமலை சீனிவாசன் நினைவிடத்தில் நடைபெற்றது. தமுஎகச மாவட்ட தலைவர் இ.சங்கரதாஸ் தலைமையில் நடைபெற்ற
இவ்விழாவில் தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செயலாளர் க.புரு ஷோத்தமன் நினைவு ஜோதி யினை எடுத்து கொடுக்க தமுஎகச மாவட்ட துணைச் செயலாளர் சோபியா சங்க மித்திரா பெற்றுக் கொண்டார். முன்னதாக சிஐ டியு மாவட்ட துணைத் தலை வர் பி.மாசிலாமணி தாத்தா ரெட்டைமலை சீனிவாசன் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் மு.தமிழ்பாரதி, ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் க.ஜெயந்தி, மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாவட்டத் தலை வர் வெள்ளி கண்ணன், தமுஎகச மாவட்டச் செய லாளர் கவிசேகர், மாவட்டப் பொருளாளர் என்.டி.ரங்க நாதன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட பொருளாளர் ராமலிங்கம் உள்ளிட்ட பலர் வாழ்த்திப் பேசினர். இதனைத் தொடர்ந்து வேடந்தாங்கல் கிராமத்தில் வாழ்ந்து மறைந்த சனாதன ஒழிப்பு போராளியும், மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான தோழர் முனியசாமியின் இல்லத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு சங்கத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த ஜோதி பயணம் செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு செப்டம்பர் 2ம் தேதி சென்னையில் நடை பெறும் சனாதன ஒழிப்பு மாநாட்டில் ஒப்படைக்கப் பட உள்ளது.