districts

img

2 சென்ட் வீட்டு மனை நிலம் மோசடி ஏழை பெண் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி

விழுப்புரம்,ஆக.7-

     இரண்டே கால் சென்ட் வீட்டுமனை ஏமாற்றி பத்திர பதிவு செய்து கொண்ட உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சபிதா என்ற பெண் தனது  குடும்பத்துடன்  தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சித்தார்.

    விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி மாவட்டத்துக்குட்பட்ட மாங்குப்பம் கிராமம், இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் சபிதா. அதே பகுதியில் இருக்கும் ரெண்டே கால் சென்ட் நிலம் உள்ளது. அதில் குடிசை வீடு கட்டி தனது குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார்.

    இந்த இடத்தை அவரது உறவினரான சுந்தரம் மற்றும் சுப்பிரமணியன் ஆகிய இருவரும் சேர்ந்து போலி ஆவணம் தயார் செய்து பத்திரப் பதிவு செய்து ஏமாற்றி விட்டதாக கூறப்படுகிறது.

   இது தொடர்பாக விக்கிரவாண்டி வட்டாட்சி யர், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதி காரிகளுக்கு பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால், சபிதா, தந்தை சுப்பிரமணி, சசிகலா, சுப்புலட்சுமி, தேவிகா ஆகியோருடன் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்திற்கு திங்கள்கிழமை (ஆக.7) மனு கொடுக்க வந்தனர். அப்போது, ஆட்சியர் அலுவலகம் முன்பு சபிதா தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.

     ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் கள் தடுத்து நிறுத்தினர்.  பின்னர் அவர்களிடம் காவல்துறை யினர் விசாரணை மேற்கொண்ட னர்.