districts

சென்னை முக்கிய செய்திகள்

சரக்கு லாரி கவிழ்ந்தது 

திருவள்ளூர்,செப்.24- திருவள்ளூரில் இருந்து விழுப்புரம் நோக்கி பீர் பாட்டில் ஏற்றிக்கொண்டு சனிக்கிழமையன்று நள்ளிரவு லாரி சென்றது.  இரவு 12 மணியளவில் மதுராந்தகம் அருகே  ஒரு திருப்பத்தில்  ஒட்டுநரின்  கட்டுப்பாட்டை இழந்த லாரி  சாலையோரம் தலைகுப்புற கவிழ்ந்தது.  இதில் லாரியில் இருந்த பீர்பாட்டில்கள் உடைந்து பீர் ஆறாக ஓடியது.விபத்து நடந்த சிறிது நேரத்தில் போலீசார் வருவதற்கு முன்பே அவ்வழியே சென்ற வாகன  ஓட்டிகள் சிலர் பீர் பாட்டில்களை அள்ளிச் சென்றனர். அவர்களை காவல்துறையினர் எச்சரித்தனர். இதையடுத்து பீர்பாட்டில்களை எடுத்தவர்கள் அங்கேயே ஆங்காங்கே வீசி விட்டு சென்றனர். அந்த பீர் பாட்டில்களை போலீசார் சேகரித்தனர். இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

பேருந்துகள் மோதல்  20 பேர் காயம்

மதுராந்தகம், செப்.24-  மதுராந்தகத்தில் இருந்து எல்.எண்டத்தூர் வழி யாக காஞ்சிபுரம் நோக்கி தனி யார் பேருந்து சென்றது.  இதில் 20-க்கும் மேற்பட்ட  பயணிகள் இருந்தனர். மதுராந்தகம் அருகே அய்யனார் கோவில் என்ற இடத்தில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடக்க முயன்ற போது, தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி வந்த தனியார் பேருந்து திடீரென பயங்கரமாக மோதியது. இதில் பேருந் தின் முன்பகுதி முழுவதும்  நொறுங்கியது. பேருந்துக ளில் பயணம் செய்த 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.  இந்த விபத்து காரண மாக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்துக் கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் மதுராந்தகம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விபத்தில் சிக்கிய 2 பேருந் துகளையும் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்த னர்.

கேட்பாரற்று கிடந்த 1300 வாகனங்கள் பறிமுதல்

சென்னை,செப்.24- சென்னை மாநகர சாலை களில் கேட்பாரற்று கிடக்கும் வாகனங்களை ஏலத்தில் விட மாநகராட்சி முடிவு செய்தது. சென்னை மாநகரம் முழுவதும் சாலையோரமாக நீண்ட நாட்களாக 1308 வாகனங்கள் நிறுத்தப் பட்டிருந்தது தெரிய வந்துள்ளது. இந்த வாகனங் களை அப்புறப்படுத்துவது தொடர்பாக மாநகராட்சி மேயர் பிரியா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் சாலை யோரமாக நிறுத்தப் பட்டுள்ள வாகனங்களை பறிமுதல் செய்து அவை களை ஏலத்தில் விடுவது  என்று முடிவு செய்யப்பட் டுள்ளது. இதன்படி சென்னையில்  16 மோட்டார் சைக்கிள்கள், 3 ஆட்டோக்கள், 95 நான்கு சக்கர வாகனங்கள் என 132 வாகனங்கள் அப்புறப் படுத்தப்பட்டுள்ளன. சென்னை வடக்கு மண்ட லத்தில் 271 வாகனங்களில் 14  வாகனங்கள் அப்புறப் படுத்தப்பட்டுள்ளது.

கிளாம்பாக்கத்தில் நவீன காவல்நிலையம்

வண்டலூர்,செப்,24- சென்னையில் அதி கரித்து வரும் போக்கு வரத்து நெரிசலை கருத்தில் கொண்டு வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் ரூ.394 கோடி செலவில் 88.50 ஏக்கர் பரப்பளவில் நவீன வசதிகளுடன் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. 90 சதவீதத்துக்கு மேல் கட்டுமான பணிகள் முடிந்த நிலையில் விரைவில் திறக்கப்படவுள்ளது. இந்த நிலையில் புதிய பேருந்து நிலையம் திறக்கப் படும் போது பயணிகள் பாது காப்பு, போக்கு வரத்து சீரமைப்பு, கண்காணிப்பு கேமிரா பொருத்தம் உள்ளிட்ட பல்வேறு வசதி களை மேம்படுத்த திட்ட மிடப்பட்டுள்ளது. இதற்காக நவீன வசதி களுடன் காவல் நிலையம் அமைய இருக்கிறது. இதற்கான டெண்டரை சி.எம்.டி.ஏ. கோரி உள்ளது. சுமார் 7,380 சதுர அடி பரப்பளவில் புதிய காவல் நிலையம் அமைய இருக்கிறது.

இடிந்து விழும் நிலையில் காவலர் குடியிருப்புகள்

சென்னை,செப்.24- சென்னை மாநகர காவல் துறை யினர் வசித்து வரும் குடியிருப்புகள் இடிந்து விழுந்தும் நிலையில் உள்ளதாக  காவல்துறையினரின் குடும்பத்தினர் அச்சம் தெரி வித்துள்ளனர். சென்னையில் உள்ள காவலர்கள் குடியிருப்புகளில் பல ஆபத்தான முறையில் இடிந்து விடும் நிலையில் காணப்படுகிறது. கீழ்பாக்கத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் வசிப்ப வர்கள் அங்கிருந்து காலி செய்யு மாறு அவர்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு காவலர்களின் குடும்பப் பெண்கள் சென்னை காவல்ஆணையர் அலு வலகத்தில் முற்றுகையிட்டு மனு அளித்தனர். மாற்று இடம் ஒதுக்கி கொடுக்காமல் எங்களை காலி செய்யச் சொன்னால் நாங்கள் எங்கே செல்வோம்? எனவே உரிய குடி யிருப்புகளை அடையாளம் காட்டி விட்டு எங்கள் வீடுகளை காலி செய்ய சொல்ல வேண்டும் என்று தெரி வித்தனர். கீழ்ப்பாக்கம் குடியிருப்பை போன்றே சென்னையில் நரியங்காடு பழைய காவல் குடியிருப்பு, புதுப்பேட்டை காவலர் குடியிருப்பு ஆகியவையும் இடிந்து விழும் நிலையில் உள்ளன. ஆனால் இங்கு குடியிருக்கும் காவலர்கள் அது தொடர்பான புகார் மனுக்களை கொடுப்பதற்கு தயங்குவதாக கூறப்படுகிறது. அது போன்று புகார் அளித்தால் தங்களுக்கு வேலையில் ஏதும் பாதிப்புகள் ஏற்பட்டு விடுமோ? என்று அவர்கள் அஞ்சுகிறார்கள். சென்னை மாநகரில் இதேபோன்று பல்வேறு காவல் குடியிருப்புகள் செயல்பட்டு வருகின்றன. அந்த குடி யிருப்புகளிலும் காவலர்களுக்கு தேவையான வசதிகள் முழுமையாக செய்யப்படவில்லை என்பதே போலீ சாரின் குற்றச்சாட்டாக உள்ளது. சிலர் குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள வாடகை வீடுகளில் தங்கி இருக்கின்றனர். எனவே பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்களின் குடும்பத்தை பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உயர் அதிகாரிகள் காவலர் குடி யிருப்புகளின் தரத்தை ஆய்வு செய்து பழமையான கட்டிடங்களை உடனடியாக இடிக்கவும் அங்கு வசிப்பவர்களுக்கு புதிய வீடுகளை ஒதுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.

பிஎஸ்வி பொறியியல் கல்லூரியில்  முதலாம் ஆண்டு வகுப்பு தொடக்கம்

கிருஷ்ணகிரி,செப்.24- பர்கூர் அருகில் உள்ள பி.எஸ்.பி பொறியியல், தொழில்நுட்ப கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்பு தொடக்க விழா நடைபெற்றது. கல்லூரியின் நிறுவனத் தலைவர் செல்வம் தலைமை தாங்கி பேசுகையில், “மாணவர்கள் படிப்போடு நவீன விஞ்ஞானத்தையும் செயற்கை நுண்ணறிவையும் கற்றுக்கொள்ள வேண்டும்” என்றார். செயலாளர் விவேக், “பொறியியல் படிப்பின் முக்கியத்துவம் குறித்தும் மாணவர்களின் இலக்குகள் பற்றியும் பேசினார். முதல்வர் லாரன்ஸ், துணைத் தலைவர் பேராசிரியர் சதீஷ்குமார் வாழ்த்திப் பேசினர்.

மக்கள் ஒற்றுமை மேடை  வேலூரில் அமைப்பு குழு

வேலூர். செப் 24- தமிழக மக்கள் ஒற்றுமை மேடையில் வேலூர் மாவட்ட அமைப்பு குழு கூட்டம் சி. எஸ். மகாலிங்கம் தலைமையில் நடைபெற்றது. மாநில அமைப்பாளர் உதயகுமார் கலந்து கொண்டார்.  வேலூர் மாவட்ட மக்கள் ஒற்றுமை மேடை பணிகளை ஒருங்கிணைக்க அ.இளங்கோ (விசிக), சி.எஸ்.மகாலிங்கம் (சிபிஎம்), தமுமுக, திராவிட முஸ்லிம் முன்னேற்ற கழகம் பிரதிநிதிகள் அமைப்பாளர்களாக கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.  இக்கூட்டத்தில் நீல.சந்திரகுமார், எஸ். பிலிப் (விசிக), எஸ். தயாநிதி, கே.சாமிநாதன், ஆர். சுடரொளியன், (சிபிஎம்), கோபி, கௌதமன் (மதிமுக) மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி, தமுமுக உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சுற்றுசூழலுக்கு ஏற்றதாக ரப்பர் பொருட்களை மாற்ற வலியுறுத்தல்

சென்னை, செப்,24- சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாக ரப்பர் பொருட்களை மாற்றவேண்டும் என்று சென்னையில் நடைபெற்ற 24-வது ரப்பர் மாநாட்டில் பேசிய நிபுணர்கள் வலியுறுத்தினர். நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இந்திய ரப்பர் உற்பத்தியாளர்கள் ஆராய்ச்சி சங்கம் (ஐஆர்எம்ஆர்ஏ) நடத்திய  மாநாட்டைத் தொடங்கி வைத்து, பேசிய ஒன்றிய அரசின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் (டிபிஐஐடி) இணைச் செயலர் அஞ்சீவ் சிங், ரப்பர் பல பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் சமீபத்தில் தனது சொந்த மாநிலமான பீகாருக்குச் சென்றபோது ரப்பர் பொருட்களால் அணை கட்டப்பட்டதை அறிந்து ஆச்சரியப்பட்டதாக கூறினார். ரப்பர் பொருளாதாரம் தற்போது வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்ற அவர், உலகளாவிய ரப்பர் தேவை 50 பில்லியன் டாலர்களை தொட உள்ளது என்றார். இந்த மாநாட்டில் ஐஆர்எம்ஆர்ஏ இன் தலைவர் ஆர்.முகோபாத்யாய், மாநாடு மற்றும் கண்காட்சியின் நோக்கம் குறித்து விளக்கினார். மாநாட்டு தலைவர் கே.ராஜ்குமார், ஜே.கே.டயர் நிர்வாக இயக்குநர் அன்சுமான் சிங்கானியா உள்ளிட்டோரும் பேசினர்.