கடலூர்,ஜூலை 22-
மனித உயர்வுக்கு வழி காட்டிய சமத்துவ வள்ள லாரின் 200 வது பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் மற்றும் நிதியளிப்பு விழா பொதுக்கூட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் விருத்தாசலத்தில் நடை பெற்றது. வட்டச் செயலாளர் என்.எஸ். அசோகன் தலைமை தாங்கினார். நகரச் செயலாளர் ஆர். கலைச்செல்வன் வர வேற்றார்.
அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி னார். மாவட்டச் செயலாளர் ஜி. மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.ஆறுமுகம், பி. கருப்பையன், மூத்தத் தலைவர் ஏ.சந்திரசேகர், ஜீவானந்தம், குமரகுரு, சுந்தரவடிவேல், இளங் கோவன், ஜெயமணி, அன்பு செல்வி உள்ளிட்டோர் பேசினர்.