மாநிலம் முழுவதும் தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக வடசென்னை மாவட்டம் திருவொற்றியூர் மண்டலக்குழு தலைவர் தி.மு.தனியரசு ஓராண்டு சந்தாவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் பி. சம்பத்திடம் வழங்கினார். திருவொற்றியூர் பகுதிக்குழு சார்பில் 50 தீக்கதிர் ஆண்டு சந்தாவும் வழங்கப்பட்டது. மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.ஜெயராமன், எஸ்.பாக்கியலட்சுமி, மாவட்டக் குழு உறுப்பினர் செல்வகுமாரி, பகுதிச் செயலாளர் கதிர்வேல் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.