districts

img

ஆக்கிரமிப்பிலுள்ள அரசு நிலத்தை மீட்க பொதுமக்கள் கோரிக்கை

உதகை , நவ 23 - பந்தலூர் அருகே ஆக்கிரமிப்பிலுள்ள அரசு நிலத்தை மீட்க வேண்டுமென அப்பகுதிப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே உப்பட்டி  புஞ்சை வயல் செல்லும் சாலையில் அரசு பழங்குடியினர் தொழிற் பயிற்சி மையம், அரசு நடுநிலைப்பள்ளி, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவை செயல்பட்டு வருகிறது. இந்நி லையில், இச்சாலையின் வழியே தனிநபர் ஒருவர் அரசு நிலத்தை ஆக்கிரமித்து பெட்டிக்கடை அமைத்துள்ளார். தற்போது இந்த பெட்டிக்கடை முன்பாக இருக்கைகள் அமைத்து மது பிரியர்கள் பலர் அமர்ந்து கூட்டமாக மது அருந்தி வருகின்றனர்.

மேலும், இவர்கள் சுகாதார நிலை யத்திற்கு சிகிச்சைக்காக வரும் பெண்கள், தொழிற்பயிற்சி மாணவிகள் மற்றும் அவ்வழியை உபயோகிக்கும் பெண் கள் ஆகியோரை கிண்டல் செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அச்சாலையின் வழியே பெண்கள் மற்றும் குழந்தைகள் நடக்க அச்சமடைந்து வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆக்கிர மிப்பிலுள்ள அரசு நிலத்தை மீட்டு பெட்டிக்கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதிப் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;