பொள்ளாச்சி, நவ. 23- வால்பாறை பகுதியில் வசித்து வரும் அமைப்பு சாரா தொழிலாளர்கள், நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்யும் வகையில் சிறப்பு முகாம் நடத்திட வேண்டும் என தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்கள் சங்கத்தினர் (சிஐடியு) வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து வால்பாறை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்கள் சங்கத்தின் கோவை மாவட்ட பொதுச் செயலாளர் பி.பரமசிவம் தொழிலா ளர்கள் துறை நல வாரிய ஆணையாளருக்கு எழுதிய கடி தத்தில் தெரிவித்துள்ளதாவது: கோவை மாவட்டம், பொள் ளாச்சியை அடுத்த வால்பாறை பகுதியில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இவர்களில் பலர் அமைப்புசாரா நலவாரி யத்தில் பதிவு செய்யாமல் இருந்து வருகின்றனர். இத னால் பேரிடர் காலங்களிலும், நோய்த்தொற்று காலங்களி லும் அரசு அறிவிக்கும் நிவாரண உதவிகள் கிடைக்காமல் சென்றுவிடுகிறது. தற்போது, தமிழக அரசு அமைப்பு சாரா நலவாரியத் தில் பதிவு செய்ய ஆன்லைன் முறையை அறிமுகபடுத்தி யுள்ளது. வால்பாறை பகுதியில், இணையதள கோளாறுகள் இருப்பதால் அமைப்பு சாரா நலவாரியத்தில் பதிவி செய்ய தனியாக சிறப்பு முகாம் அமைத்துத் தர வேண்டும். இது வால்பாறை பகுதி மக்களுக்கு நிவாரண உதவிகள் பெற உதவியாக இருக்கும் என அக்கடிதத்தில் வலியுறுத்தப் பட்டுள்ளது.