districts

img

பனைமரங்களின் வளர்ச்சியை அழிக்கும் ஆர்எஸ்பதி மரங்கள் காப்பாற்ற விவசாயி கோரிக்கை

சிவகங்கை,மே 16- ஆர்எஸ்பதி மரங்களை வளர்ப்ப தால் நீர்வளமும் பாதிக்கப்பட்டு, பனைமரங்களின் வளர்ச்சியும் பாதிப்படைகிறது என்று விவசாயிகள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.

சிவகங்கை மாவட்டம், துவங்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி காத்தமுத்து. இவர் சிவகங்கை மானா மதுரை சாலையின் ஓரத்தில்  மான்ட்போ ர்டு பள்ளி அருகே கொளுத்தும் வெயி லில் நுங்கு வெட்டி விற்றுக் கொண்டிருக்கிறார்.

பனைமரங்களின் வளர்ச்சி நிலை  குறித்து கேட்டபோது அவர் கூறுகை யில், பனைமரத்திலிருந்து கிடைக்கும் நுங்கு, பனங்கிழங்கு இரண்டுமே மருத்துவ குணமுள்ள உணவாகும்.ஏழை மக்களின் குடிசைக்கு பனை ஓலை பயன்படுகிறது. பதநீர், கள்ளு, கருப்பட்டி கிடைக்கிறது.அடி முதல் நுனிவரை மனிதர்களுக்கு  பனைமரம் பயன்படுகிறது. கருப்பட்டி கலந்த உணவுகளை சாப்பிட்டால் கால்சியம் சத்து கிடைக்கிறது. பதநீரை காய்ச்சி கருப்பட்டி தயாரிக்கப்படுகிறது.

இத்தகைய பயன்களை தருகின்ற பனை மரங்களின் நுங்கு,பனங்கிழங்கு வளர்ச்சி குறைந்துள்ளது. இதற்கு இப்பகுதியில் ஆர்எஸ்பதி மரம்  வளர்க்கப்பட்டு வருவதே காரண மாகும். ஆர்எஸ்பதி மரங்களால்  நீர்வளம் பாதிக்கப்படுகிறது.இத னால் பனைமரம் வளமான மரமாக வளர வில்லை. பனைமரத்தை காப்பாற்றி னால் மனிதகுலம் பயன்பெறும். பனைமரத்தை பாதுகாக்க வேண்டும் என்றால் ஆர்எஸ்பதி மரம் வளர்ப்பதை தடுக்க வேண்டும். இதற்கு மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். மேலும் தெரிவிக்கையில், எனது மகளும்,மருமகனும் உயிரிழந்து விட்டனர். விபத்தில் உயிரிழந்த மருமகனுக்கு எந்தவிதமான நிவாரணமும் தற்போதுவரை கிடைக்கவில்லை.விபத்து நடந்து பத்து வருடங்கள் ஆகிறது.  வறுமையில் கஷ்டப்படுகிறேன் என்று விவசாயி காத்தமுத்து வேதனையுடன் கூறினார்.

;