districts

img

பொதுக் கழிப்பிடங்களில் வெஸ்டன் முறை மேயரிடம் வாலிபர் சங்கம் கோரிக்கை

திருப்பூர், செப். 5 – திருப்பூர் சீர்மிகு நகரம் திட்டத்தில் அமைக்கப்படும் பொதுக் கழிப்பிடங்களில் முதியோர், கர்ப்பிணிகள் சிரமத்தைக் குறைக்க வெஸ்டன் கழிப்பறை அமைத்திட வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர்  சங்கத்தின் திருப்பூர் தெற்கு ஒன்றிய குழு கோரியுள்ளது. திங்களன்று வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.அருள், தெற்கு ஒன்றியத் தலை வர் பிரகாஷ், தெற்கு ஒன்றியச் செயலா ளர் டி.உமாசங்கர் உள்ளிட்டோர் மேயர் ந.தி னேஷ்குமாரிடம் கோரிக்கை மனு அளித்த னர். இம்மனுவில் ஆண்டு ஒன்றுக்கு சுமார்  14 சதவிகிதம் பேர் மூட்டு வலி நோயால் அவ திப்படுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின் றன. உழைக்கும் மகளிர், மாற்றுத் திறனாளி கள், வயதானோர், கர்ப்பிணிகள் இந்திய முறை கழிவறையை பயன்படுத்துவதால் மிக வும் சிரமப்படுகின்றனர். மூட்டு வலி காரண மாக நின்று கொண்டே கழிவறையை பயன் படுத்தும் நிலையில், தூய்மைப் பணியா ளர்களும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே மாநகரில் புதிதாக அமையும் பொதுக் கழிப்பிடங்களில் வெஸ்டன் முறையை அமைத்திடவும், தற்போது பயன்பாட்டில் உள்ள பழைய கழிப்பிடங்களிலும் வெஸ் டன் முறையை மாற்றி அமைக்கவும் வேண் டும். மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து பொதுக் கழிப்பிடங்களிலும் சாய்தள படிக்கட் டுகள் அமைத்துக் கொடுக்க வேண்டும். பாதாளச் சாக்கடை, குடிநீர் பணிகளுக்கு  தோண்டப்பட்டுள்ள சாலைகளை செப்ப னிட்டு விபத்துகளைத் தவிர்க்க நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்  கொண்டனர்.