சேலம், மே 14- உலகத் தமிழ்க் கழகத்தின் 7 ஆவது மாநில மாநாட்டை வரும் செப்டம்பர் மாதத்தில் சேலத்தில் நடத்துவதென மாநில ஆட்சிக்குழுக்கூட்டத்தில் தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது. உலகத் தமிழ்க்கழகத்தின் ஆட்சிகு குழு ஆலோசனைக் கூட்டம், சேலம் மாவட்டம், வலசையூரில், மாநில துணைத்தலைவர் க.வீரசோழன் சக்கர பாணி தலைமையில் நடைபெற்றது. பொதுச்செயலாளர் செ.சி.இளந்திரை யன் வரவேற்றார். இக்கூட்டத்தில், 1974 ஆம் ஆண்டு மே 8 ஆம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கரு ணாநிதி ஆட்சியில் தொடங்கப்பட்ட செந்தமிழ் சொற்பிறப்பியல் அகர முதலி திட்ட இயக்கத்தின் 50 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, உலகத் தமிழ்க் கழகத்தின் 7 ஆவது மாநாட்டை செப்.28, 29 ஆம் தேதிகளில் சேலத்தில் நடத்து வதென முடிவு செய்யப்பட்டது. இம் மாநாட்டில், தமிழறிஞர்களை அழைத்து ஆய்வரங்கம், மாநாட்டுப் பேரணி நடத்துவது, மாநாட்டை சிறப் பாக நடத்திட குழுக்கள் அமைப்பது, மாநாட்டிற்கு தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சரை அழைப்பது, செந்தமிழ் சொற்பிறப்பியல் அகர முதலி திட்ட இயக்கத்தின் 50 ஆவது ஆண்டு பொன் விழாவை மாவட்டந்தோறும் நடத்திட வேண்டும். “எங்கும் தமிழ், எதிலும் தமிழ்” என்ற நோக்கோடு தமிழ் வளர்ச் சிக்கு வித்திடவும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுப்பது உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில், உலகத் தமிழ்க்க ழக மாநில இணைப் பொதுச்செயலா ளர் பே.துரைச்செல்வன், துணைப் பொதுச்செயலாளர் வீர.பாலன், தமிழ கத் தமிழாசிரியர் கழகத் துணைச்செய லாளர் ப.தமிழ்ச்செல்வன், நாமக்கல் மாவட்ட அமைப்பாளர் ம.தமிழன்பன், சேலம் கிளை நிர்வாகிகள் மோகனராசு, ஓவியா, லட்சுமணபெருமாள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.