உடுமலை, டிச.1- உடுமலை உழவர் சந்தை எதிரே உள்ள முழு நேர கிளை நுாலகம் எண் இரண்டில், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் சார்பில் உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி, எய்ட்ஸ் மற்றும் கொரானா பெருந்தொற்றுக்கு முடிவுகட்டுவோம் என்ற கருப் பொருளை மையமாகக் கொண்டு உறுதிமொழி ஏற் கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு நூலகர் கணேசன் தலைமை வகித்தார். பாரதியார் நூற்றாண்டு பெண் கள் மேல்நிலைப்பள்ளி நல்லாசிரியர் விஜய லட்சுமி, உடுமலை அரசு மருத்துவமனை மனநல ஆலோசகர் மணிகண்ட ராஜ், நூலகர்கள் மகேந் திரன், பிரமோத் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.