districts

img

உடுமலை இஎஸ்ஐ மருத்துவமனையில் மருத்துவர் பற்றாக்குறையால் தொழிலாளர்கள் தவிப்பு

உடுமலை, டிச.18- உடுமலை தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவமனையில் (இஎஸ்ஐ) மருத்துவர்கள் பற்றாக் குறையால், சிகிச்சைக்கு வரும்  தொழிலாளர் பெரும் சிரமத்திற் குள்ளாகி வருகின்றனர். உடுமலை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் தொழில் நிறுவ னங்களில் பணியாற்றும் தொழிலா ளர்களுக்காக உடுமலை ஊராட்சி  ஒன்றிய அலுவலகம் பகுதியில் இஎஸ்ஐ மருத்துவமனை செயல் பட்டு வருகிறது. இந்த மருத்துவம னையில் மூன்று மருத்துவர்கள், மூன்று மருந்தாளுநர்கள் மற்றும்  ஆய்வுக்கூடத்துடன் செயல்பட்டு  வந்தது. மேலும், நடமாடும் மருத் துவமனையின் மூலம் காலையில் பூலங்கிணறு மில்கேட் பகுதியி லும், மாலையில் உடுமலை எஸ். வி.புரம் பகுதியிலும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.  இந்நிலையில், தற்போது இந்த மருந்துவமனையில் ஒரு மருத்துவர், ஒரு மருந்தாளுநர் மட்டுமே உள்ளனர். ஆய்வுக் கூடத்திற்கு பணியாளர் நியமிக்கப் படாததால் ஆய்வுக்கூடம் செயல் படாமல் இருக்கிறது. இதனால், அடிப்படை பரிசோதனைக்குகூட நோயாளிகள் தனியார் நிறுவனத் திற்கு செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதே போல், போதிய பராமரிப்புப் பணி கள் மேற்கொள்ளப்படாததால் மருத்துவமனை வளாகம் முற்றி லும் புல் புதர்கள் நிறைந்து விஷ பூச்சிகள் தங்குமிடமாக காட்சி தரு கிறது.  இந்த மருத்துவமனைக்கு தின மும் 200க்கும் மேற்பட்ட தொழிலா ளர்கள் மற்றும் அவர்களது குடும் பத்தார் மருத்துவம் பார்க்க வருகி றார்கள். ஆனால், மருத்துவர் மற்றும் பணியாளர்கள் பற்றாக் குறையால், நோயாளிகள் மறு நாள் மீண்டும் சிகிச்சைக்கு வர  வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஆகவே, இந்த மருத்துவ மனையில் உடனடியாக போதிய  மருத்துவர்கள், செவிலியர்கள்,  பணியாளர்கள் உள்ளிட்டோரை  நியமிக்க வேண்டும். மேலும், மடத் துக்குளம், குடிமங்கலம், உடு மலை பகுதியைச் சேர்ந்த தொழி லாளர்கள் பயன்பெறும் வகை யில், படுக்கை வசதிகளுடன்  கூடிய மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும். மருத்துவ மனை வளாகத்தை தூய்மைப் படுத்தி பழுதடைந்த கட்டிடங் களை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளது.

;