districts

img

சீரான குடிநீர் விநியோகம் செய்யக்கோரி காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

திருப்பூர், செப். 9 - திருப்பூர் அருகே செங்கப்பள்ளி ஊராட்சியில் சீரான குடிநீர் விநியோ கம் செய்ய வலியுறுத்தி அப்பகுதி பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஊத்துக்குளி ஒன்றியம் செங்கப் பள்ளி ஊராட்சி 6ஆவது வார்டு பாசங் காட்டுபாளையம், லட்சுமி நகர், ராதா  நகர் பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி மக்களுக்கு தினமும் 10 ஆயிரம் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்பட வேண்டிய நிலையில் போதுமான குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வந்தனர். இப்பகுதிக்கு போதுமான குடிநீர்  விநியோகம் செய்ய வலியுறுத்தி இப் பகுதி மக்கள் செங்கப்பள்ளி ஊராட்சி  நிர்வாகம் மற்றும் ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் பல  முறை மனு அளித்துள்ளனர். எனினும்  குடிநீர் பிரச்சனைக்குத் தீர்வு காணப்படவில்லை. இந்த நிலையில் கடும் குடிநீர் பற் றாக்குறை நிலவியதால் ஆத்திரம டைந்த இப்பகுதி பெண்கள் வியாழக் கிழமை காலி குடங்களுடன் செங்கப் பள்ளி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து ஊத்துக்குளி காவல் நிலைய காவலர்கள் மற்றும் வருவாய்த் துறை, குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் சம்பவ இடத் துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட வர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி னர். இதில் இப்பகுதிக்கு போதுமான  குடிநீர் சீராக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி கூறியதைத் தொடர்ந்து சுமார்  1 மணி நேரம் நீடித்த சாலை மறியல்  போராட்டம் முடித்துக் கொள்ளப்பட் டது.

;