கோவை, டிச. 29- பொங்கல் பரிசு வழங்கும் டோக்க னில் அமைச்சர் எஸ்பி.வேலுமணி புகைப்படத்தை அச்சிட்டு அதிமுக வினர் வழங்குவதை கண்டித்து திமுகவினர் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தை முற்றுக்கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பொங்கல் விழாவை முன்னிட்டு அனைத்து ரேசன் அட்டைதாரர்க ளுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு டன் ரூ.2 ஆயிரத்து 500 வழங்குவது என தமிழக அரசு சார்பில் உத்தர விடப்பட்டது. அரசின் சார்பில் வழங் கப்படும் இந்தப் பரிசு பொருட்களை அதிமுகவினர் வழங்குவது போல தோற்றத்தை உருவாக்கி வருகின்ற னர். இது தேர்தல் பிரச்சாரத்திற்காக அதிமுகவினர் இத்தகைய இழிவான அரசியலை மேற்கொண்டு வரு கின்றனர். மேலும், கோவையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி படத்து டன் அதிமுகவில் வகிக்கும் பொறுப்பு களை அச்சிட்டும், தமிழக அரசின் சின் னத்தையும் இடம் பெறச்செய்து பொது மக்களுக்கு விநியோ கம் செய்து வருகின்ற னர். அரசு பணத்தை அதிமுகவின் பணத் தைபோல அரசியல் செய்யும் நடவடிக் கையை கண்டித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தை திமுகவினர் செவ்வாயன்று முற்றுகையிட்டனர். இதனையடுத்து காவல் துறையினர் தலையிட்டு சமரசம் செய்ததை யடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதில், திமுக கோவை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் சிஆர்.இராமச்சந்திரன், மாநகர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பையா என்ற கிருஷ்ணன், கிழக்கு மாவட்ட பொறுப் பாளர் சேனாதிபதி, சண்முக சுந்தரம் எம்.பி., உள்ளிட்ட 500க்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டனர்.