கோவை, ஜூலை 26- ஆனைமலை அருகே உள்ள கவியருவியில் காட்டாற்று வெள்ளம் காரணமாக, சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பகத்திற் குட்பட்ட பகுதியில் கவியருவி அமைந்துள்ளது. இயற்கை எழில் சூழ்ந்த இந்த அருவிக்கு, உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூர், வெளி மாநிலத்திலிருந்து அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்து குளிப்பது வழக்கம். கடந்த ஜனவரி மாதம் முதல் தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு வறட்சி காரணமாக கவியருவி மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் இம்மாத துவக் கத்திலிருந்து தென்மேற்கு பருவ மழை பெய்ததைடுத்து, கடந்த சில நாட்களாக கவியருவியில் குளிக்க சுற்றுலா பயணி களுக்கு வனத்துறை அனுமதி அளித்தது. தற்போது மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிர மடைந்துள்ள நிலையில், கவியருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அருவியில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அருவியில் நீர்வரத்து குறைந்தவுடன் சுற்றுலா பயணிகள் குளிக்க அனு மதி அளிக்கப்படும் எனவும் வனத்துறையினர் தெரிவித்த னர்.