districts

img

இயற்கை வளங்கள் நிறைந்த உடுமலைபேட்டை செழிப்பது எப்போது?

உடுமலை ஒன்றியத்தில் 38 ஊராட் சிகள், தளி பேரூராட்சி, மலை செட்டில் மெண்ட் பகுதிகள் என 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்கின்றனர். உடு மலையின் பிரதான தொழிலாக விவசா யம் உள்ளது. 

பிஏபி திட்டம்

பரம்பிக்குளம் ஆழியார் பாசனத் திட்டம் (பிஏபி) மற்றும் அமராவதி அணைத் திட்டங்கள், நிலத்தடி நீராதா ரங்கள் மூலம் பாசனம் நடைபெறுகி றது. பிஏபி பாசனக் கால்வாய்கள் திட் டம் துவங்கப்பட்ட காலத்திலிருந்து ஏறத்தாழ 60 ஆண்டு காலமாக பயன் படுத்தப்பட்டு இன்றைக்கு மிக மோச மான நிலையில் சிதிலமடைந்துள்ளது. பல இடங்களில் கால்வாயே இல்லா மல் வெறும் நீர் வழிப் பாதையாக மட் டுமே உள்ளதால் பாசன நீர் ஏராளமாக வீணாகிறது. அவ்வப்போது பராம ரிப்பு என்ற பெயரில் செய்யும் ஒட்டு  வேலைகளால் எந்தப் பலனுமில்லை. எனவே உடனடியாக பிஏபி பாசனக் கால்வாய்கள் சீரமைக்கப்பட வேண் டும். மேலும் இத்திட்டத்தில் தொகுப்பு அணைகளில் பல ஆண்டுகளாக கட் டப்படாமலே உள்ள நல்லாறு அணை  உடனடியாக கட்டுவதற்கான நடவடிக் கைகள் எடுக்கப்பட வேண்டும். சமீபத் தில் பெய்த தொடர்மழையால் கிடைத் திருக்க வேண்டிய அபரிமிதமான நீர் கடலில் கலக்கிற நிலைதான் உள்ளது. நல்லாறு அணை காலத்தின் தேவை. 

வேளாண்மை செழிக்க

விவசாயிகளின் விளைபொரு ளுக்கு நியாயவிலை கிடைப்பதற்கான குறைந்தபட்ச விலை உத்தரவாதம் உறுதி செய்யப்பட வேண்டும். அறுவ டைக் காலங்களில் விளைபொருட் களை பாதுகாத்து வைத்திட குளிர்பத னக் கிடங்குகள் உடுமலை ஒன்றியத் தில் கட்டாயம் உருவாக்கப்பட வேண் டும். மேலும் குறிப்பிட்ட காலத்தில் தக் காளி உற்பத்தி அபரிதமாக விளைச்சல் வரக்கூடிய காலங்களில் போதுமான விலை கிடைக்காமல் வீதியில் கொட் டியோ அறுவடையே செய்யாமல் நிலத்திலேயே விடுகிற நிலைமை உள் ளது. தக்காளி விவசாயத்தை பாதுகாத் திட உடுமலை ஒன்றியத்தில் தக்காளி ஜுஸ் மற்றும் தக்காளி ஊறுகாய் தயா ரிக்கிற தொழிற்சாலையை அரசே தொடங்கி நடத்திட முன்வர வேண்டும்.  ஆண்டு முழுவதும் நியாயமான விலை  கிடைப்பதை உறுதி செய்ய முடியும்.

பஞ்சாலைகள்

உடுமலை ஒன்றியத்தில் 70க்கும் மேற்பட்ட சிறியதும் பெரியதுமான பஞ் சாலைகள் செயல்படுகின்றன. ஆயி ரக்கணக்கான தொழிலாளர்கள் பணி யாற்றக்கூடிய நிலையில் அவர்க ளுக்கு குறைந்தபட்ச ஊதியம், பணிப் பாதுகாப்பு, இஎஸ்ஐ, பிஎப் வசதி, குடி நீர் கழிப்பிட வசதிகள் உட்பட அடிப் படை வசதிகள்கூட செய்து கொடுக்கா மல் வேலை வாங்கும் அவலநிலை உள்ளது. சம்பள ஏற்றத்தாழ்வும் கடு மையாக உள்ளது. தொழிலாளர் துறை, தொழிற்சாலை ஆய்வாளர்கள் பணி நிலைமைகள் குறித்து உரிய ஆய் வுகள் நடத்தி நடவடிக்கைககள் எடுக்க  வேண்டும். ஒப்பந்தக் கூலிகளாக கடு மையான சுரண்டலுக்கு உள்ளாக்கப் படுவது தடுத்து நிறுத்தப்பட வேண் டும். 

நிர்வாகப் பிரிவினை எப்போது?

உடுமலை ஒன்றியத்தை உடு மலை, எரிசினம்ட்டி என இரண்டு ஒன்றி யங்களாகப் பிரிப்பது என கருத்து அனுப்பப்பட்டு பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. எதிர் கால வளர்ச்சியைக் கணக்கில் கொண்டு நிர்வாகரீதியாகவும், மக்க ளுக்கும் வசதியாக இருக்கக்கூடிய அடிப்படையில் உடுமலை ஒன்றியம், எரிசினம்பட்டி ஒன்றியம் அமைப்பதற் கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

மலை மக்களுக்கு வாக்குரிமை

மலைவாழ் மக்களுக்கு சட்ட மன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் வாக்குரிமை உள்ள நிலையில், உள் ளாட்சி தேர்தலில் வாக்குரிமையும், பிர திநிதித்துவமும் மறுக்கப்பட்டுள்ளது அநீதியாகும். 18 செட்டில்மெண்ட் பகு திகளிலும் வாழக்கூடிய மக்களுக்கு மக்கள் தொகை அடிப்படையில் அவர் களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக் கப்பட வேண்டும். உடனடியாக அடுத்து நடக்கக்கூடிய உள்ளாட்சி, தளி பேரூராட்சி தேர்தலில் மலைவாழ்  மக்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட வேண்டும்.

அரசு மருத்துவமனை

உடுமலைப்பேட்டை அரசு மருத்து வமனை மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும் என எதிர்பார்க் கப்பட்ட நிலையில் மாவட்ட மருத்துவ மனைக்கான முன்மொழிவு தாராபுரத் திற்கு சென்றுவிட்டது. உடுமலை தாலுகா, மடத்துக்குளம் தாலுகா வில் 3லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வந்து சிகிச்சை பெறக்கூடிய உடுமலை  அரசு மருத்துவமனை கூடுதல் சிகிச்சை  வசதிகளோடு மேம்படுத்தப்பட வேண்டும். மருத்துவமனை அருகே நகராட்சிக்கு சொந்தமான 96 சென்ட் இடத்தை அரசு கையகப்படுத்தி மருத் துவமனை விரிவாக்கத்திற்கு பயன் படுத்த வேண்டும். ஆயிரக்கணக்கான நோயாளிகள் 80 கி.மீ தூரம் கோவைக் கும், திருப்பூருக்கும் திண்டுக்கல்லுக் கும் அலைகிற நிலைமைக்கு முடிவு  கட்டிட உடுமலை அரசு மருத்துவம னையை மேம்படுத்தி சகல சிகிச்சை களும் கிடைப்பதற்கு நடவடிக்கை  எடுக்க வேண்டும். அதேபோல் எரிசி னம்பட்டி அரசு மருத்துவமனையை யும் கூடுதல் மருத்துவ வசதிகளோடு மேம்படுத்த வேண்டும்.

கொள்ளை போகும் வளம்

உடுமலை ஒன்றியத்தில் இயற்கை  வளங்கள் கொள்ளை போவதை தடுத்து நிறுத்த வேண்டும். ஆற்று மணல் திருட்டு, ஜம்புக்கல் மலைப் பகுதிகளில் ஆக்கிரமிப்பாளர்களால் மரங்கள் வெட்டப்பட்டு, பாறைகள் உடைக்கப்பட்டு, செயற்கையாக இயந்திரங்களை கொண்டு நிலங் களை சமப்படுத்தி வேறு தவறான நோக்கங்களுக்கு பயன்படுத்தும் ஆக் கிரமிப்பாளர்கள் மீது கடுமையான நட வடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கெ னவே விவசாய தொழிலாளர்களுக் கும், சிறு விவசாயிகளுக்கும் கொடுக் கப்பட்ட பட்டா அடிப்படையில் அவர்க ளுக்கு நிலங்கள் மீட்டுக் கொடுக்கப் பட வேண்டும். ஆக்கிரமிப்பிற்குத் துணை போன அனைவர் மீதும் சட்டப் படி கடும் நடவடிக்கை எடுக்க வேண் டும்.

சுற்றுலா மேம்பாடு 

உடுமலையில் சுற்றுலா தளங்க ளாக விளங்குகிற அமராவதி, திரு மூர்த்தி அணைப் பகுதிகளை கூடுத லாக நிதி ஒதுக்கி பராமரிக்க வேண்டும். திருமூர்த்தி மலையில் நீச்சல் குளம், படகு இல்லம், பஞ்சலிங்க அருவி மற் றும் அமராவதி பூங்கா, முதலைப்  பண்ணை உள்ளிட்ட இடங்களை சிறப்பு கவனம் செலுத்தி பராமரித் தால் கூடுதலான சுற்றுலாவாசிகள் பயன் பெறுவர்.   உடுமலை ஒன்றியத்தில் போக்கு வரத்து வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும். காலை மாலை வேளைக ளில் கடுமையான நெருக்கடியாக உள் ளது. உடுமலை மேற்குப் பகுதிகளில் போதுமான பேருந்து வசதி இல்லா மல் மாணவர்கள் பொது மக்கள் கடும் இன்னலுக்கு உள்ளாகின்றனர். கூடு தல் பேருந்துகள் இயக்கப்பட வேண் டும்.


 

;