districts

img

வத்தல்மலை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்

தருமபுரி, அக்.13- தருமபுரி வட்டத்திற்குட்பட்ட வத்தல் மலை கிராமத்தில் மாவட்ட  ஆட்சியர் கி.சாந்தி தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடை பெற்றது. முகாமிற்கு தருமபுரி நாடாளு மன்ற உறுப்பினர் டி.என்.வி.எஸ்.செந்தில்குமார், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கோவிந்த சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.   இம்மக்கள் தொடர்பு திட்ட முகாமில் மாவட்ட ஆட்சியர்  கி.சாந்தி,  247 பய னாளிகளுக்கு ரூ.2.15 கோடி மதிப்பி லான பல்வேறு நலத்திட்ட உதவி களை வழங்கினார். முன்னதாக,   முகாமில் பல்வேறு  துறைகளின் சார்பில் அமைக்கப்பட் டிருந்த கண்காட்சி அரங்குகளை திறந்து வைத்து பார்வையிட்டார். இதில், தருமபுரி சார் ஆட்சியர் சித்ரா  விஜயன், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் ம. யசோதா, தருமபுரி ஊராட்சி  ஒன்றியக் குழுத் தலைவர்  எம்.செல்வம்,  மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் சே. பூங்கொடி, கொண்டகரஅள்ளி ஊராட்சி  மன்றத் தலைவர் சி.தங்கராஜ் உட்பட  உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதி கள் மற்றும் துறைசார்ந்த அலுவ லர்கள் பங்கேற்றனர்.  

;