districts

img

மக்கள் நலனுக்கு எதிரான திட்டங்களை போராடி விரட்டியடிப்போம்

சேலம், டிச.15- ஒன்றிய மோடி அரசின் மக்கள் நலனுக்கு  எதிரான திட்டங்களை தொழிலாளர்கள், பொதுமக்கள் ஒன்று சேர்ந்து போராடி விரட் டியடிக்க வேண்டும் என்று  அ.சவுந்தரரா சன் கேட்டுக்கொண்டார். ஒன்றிய அரசின் மக்கள் விரோத, தொழி லாளர் விரோத கொள்கைகளை கண்டித்து  பிப்ரவரி 23,24 தேதிகளில் அகில இந்திய வேலைநிறுத்த போராட்டம் நடைபெறவுள் ளது. இதனை விளக்கி சேலத்தில் அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் ஆயத்த மாநாடு நடைபெற்றது. இதில் சிஐடியு  மாநில தலைவர் அ.சவுந்தரராசன் பங்கேற்று பேசு கையில், மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு தொழிலாளர் மற்றும் மக்கள் விரோத கொள்கைகளை தொடர்ந்து அமல் படுத்தி வருகிறது. சாதாரண மக்களின் வாழ் வாதாரத்தை பின்னுக்கு தள்ளி,  

அம்பானி , அதானி உள்ளிட்ட கார்ப்பரேட் முதலாளிக ளுக்கு ஆதரவாக இந்த அரசின் செயல்கள்  அமைந்துள்ளது. நாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவ னங்களான வங்கி, ரயில்வே, உருக்காலை கள், விமான நிலையங்கள், கனிம நிறுவ னங்கள், பிஎஸ்என்எல், எல்ஐசி உள்ளிட்ட  அனைத்து பொதுத்துறை நிறுவனங்களை யும் தனியாருக்கு தாரைவார்த்து வருகி றது. இதனால் நாட்டு மக்களுக்கு பெரும் நஷ்டமும், தனியார் முதலாளிக்கு பெருத்த லாபமும் கிடைக்கும். எனவே, தனியார் மயத்தை ஒருபோதும் அனுமதிக்க முடி யாது.  வாய்ப்புள்ள அனைத்து இடங்களிலும் மோடி அரசு மக்கள் மீது சுமையை ஏற்றி  நசுக்கி வருகிறது. உதாரணமாக, கேஸ்  மானியமாக முன்பு 250 ரூபாய்  கிடைத்தது.  தற்போது வெறும் 24.95 பைசா மட்டுமே கிடைக்கிறது. இந்த மானியத் தொகை மூலம் மட்டும் ரூ.99 ஆயிரம் கோடிக்கு மேல் அர சிற்கு வருவாய் கிடைத்துள்ளது. இதே போல், பெட்ரோல் மற்றும் டீசல் வரி விதிப் பில் ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் ஒன்றிய அரசிற்கு கிடைத்துள்ளது.

அதேநேரம், இது ஏழைகளின் பணம், ஏழை மக்களின் மேல்  திணிக்கப்பட்ட வரியினால் வந்த பணம் என் பதை மோடி அரசு புரிந்து நடக்க மறுக்கிறது. குறிப்பாக, அம்பானி, அதானி உள்ளிட்ட கார்ப்பரேட் முதலாளிகளுக்கு பதினோரு லட்சம் கோடி ரூபாய் வழங்கிய மோடி, ஊர டங்கு காலத்தில் நாம் பசியாலும், பட்டினியா லும் இருந்தபோது எந்த உதவியும் செய்ய வில்லை. வெறும்  ரூ.ஒரு லட்சம் கோடி செலவு செய்து இருந்தால் மக்கள் ஊரடங்கு  காலத்தில் ஒரளவேனும் நிம்மதியாக இருந் திருப்பார்கள். ஆனால், மோடி அரசின் பார முகத்தால் மக்கள் தொடர்ந்து துன்பப்பட்டு  வருகின்றனர். முறைசாரா தொழிலாளர்கள் 40 கோடிக் கும் மேற்பட்டோர் வேலை உத்தரவாதம் இல்லாமல் இருக்கின்றனர். இவர்களின் தொழில்களை முறைப்படுத்த வேண்டும். மக்களுக்கான ஆட்சியை நடத்த வேண்டும்.

பணமாக்கல் என்ற பெயரால் நாட்டின் பொதுத் துறை நிறுவனங்களை அழிக்க, மத்திய தொழிற்சங்கங்கள் ஒருபோதும் அனும திக்க மாட்டோம். விவசாயிகள் போராட்டத் திற்கு ஆதரவாக அனைத்து தரப்பு மக்களும்  போராடியதன் விளைவாக, தற்போது ஒன் றிய மோடி அரசு வேளாண் சட்டங்களை ரத்து  செய்துள்ளது. அதேபோல் மக்கள் நல னுக்கு எதிரான ஒன்றிய மோடி அரசின் திட் டங்களை தொழிலாளர்கள், பொதுமக்கள்  ஒன்று சேர்ந்து போராடி விரட்டியடிக்க வேண் டும். இவ்வாறு அ.சவுந்தரராசன் பேசி னார்.

;