districts

img

மக்களின் கருத்தை அறிந்து பாலம் அமைக்க வேண்டும்

 அவிநாசி,அக்.22- மக்களின் வசதிக்காக அமைக் கப்படும் பாலங்கள் மக்களின் கருத்தை அறிந்தே கட்ட வேண்டும்  என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பி. ஆர். நடராஜன் வலியுறுத்தியுள்ளார். திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியம், கணியம்பூண்டி  ஊராட் சிக்குட்பட்ட வஞ்சிபாளையம் பகுதியில் இருந்து திருப்பூர் செல்லும் சாலையில் புதிதாக பாலம் அமைக்கும் பணி நடை பெற்று வருகிறது. பாலம் உயர் வான நிலை கட்டப்பட்டு வருவ தால், பொதுமக்கள் செல்வதற்கு போதிய வழித்தடம் இன்றி அவதிப் படுவதும், வாகன ஓட்டிகளும் பாதிப்படைவார்கள். மேலும் அமைக்கப்படுகிற பாலத்தில் மழை நீர் ஆனது ரயில்வே இடத்தில் தேங்கும் நிலை உருவாகிறது. இதன் காரணமாக ரயில்வே தண்ட வாளத்தில் மழை நீர் சூழும் அபாயம் ஏற்படும்.  மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு பொதுமக்களுக்கு ஏதுவாக பாலம் அமைத்து தர  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி   வலியுறுத்தி வருகிறது. இந்நிலை யில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், பாலம் கட்டப்பட்ட இடத்தை பார் வையிட்டார். இதன் தொடர்ச்சி யாக, நெடுஞ்சாலை துறை அலுவ லர்களை சந்தித்து  பாலத்தை  ஆய்வு நடத்த வலியுறுத்தியதை யடுத்து, நெடுஞ்சாலைத்துறை அதி காரிகள் பார்வையிட்டு, உரிய அளவில் பாலம் கட்டப்படும் என் றனர். இருப்பினும் பொதுமக்களின் கருத்து கேட்ட பிறகு பாலம் கட்ட வேண்டும் என பி.ஆர்.நட ராஜன் எம்பி வலியுறுத்தினார். இந்த ஆய்வின்போது, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய  கவுன்சிலர் பி.முத்துசாமி, புதுப் பாளையம் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் குமரவேல், பால சுப்பிரமணியம், தேவிகா உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

;