திருப்பூர், ஏப்.6- திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே நல்லதங்காள் நீர்த்தேக்கத்தில் இருந்து விவசாயப் பாசனத்திற்காக தண் ணீர் திறந்து விடப்பட்டது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் தலைமை யில் நடைபெற்ற இந்நிகழ்வில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பங்கேற்று தண்ணீரை திறந்து வைத்தார். நல்லதங்காள் ஓடை நீர்த்தேக்கம் பாசனப் பகுதி யில் உள்ள 4,744 ஏக்கர் பாசன நிலங்களில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக பயிரிடப்பட்டுள்ள பயிர் களை காப்பாற்றும் பொருட்டும், கால்நடைகளின் குடிநீர்த் தேவைக்காகவும் நல்லதங்காள் பிரதானக் கால்வாய் மதகு வாயிலாக செவ்வாய்க்கிழமை முதல் நாளொன் றுக்கு 35 அடி வீதம் 7 நாட்களுக்கு 21.17 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.