ஈரோடூ, அக்.31– குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்களுக்கு அரசு அறிவித்த போனசை மாற்றி வழங்க வலியுறுத்தி, சிஐடியு குடிநீர் வடிகால் வாரிய தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் மாநிலம் முழுவதும் 550க்கும் மேற்பட்ட கூட் டுக்குடிநீர் திட்டங்களில் 2700 நிரந்தர பணி யாளர்களும் மற்றும் 4000 தற்காலிக பணியா ளர்கள் பணியாற்றி வருகின்றனர். இத்தொழி லாளர்களுக்கான தீபாவளிக்கு உண்டான போனஸ் அறிவிப்பு என்பது குடிநீர் வடிகால் வாரியம் கடந்த காலங்களில் நஷ்டத்தில் இயங்கி வந்ததால் 8.33 சதவிகிதம் என்று வழங்கி வந்தது. ஆனால், தற்போது குடிநீர் கட்டணத்தை உயர்த்தி கடந்த ஆண்டுகளில் ஆயிரம் லிட்டருக்கு மூன்று ரூபாய் என்று இருந்த குடிநீர் கட்டணம் கடந்த ஆண்டு எட்டு ரூபாய் 50 பைசா என்று மாற்றி அமைத்து தற்போது 16 ரூபாய் என்று மாற்றி அமைத் துள்ளது. தனியாருக்கு ரூபாய் 50 என்று கட்டணத்தை உயர்த்தி உள்ளது. இந்த குடிநீர் கட்டணம் உயர்த்தியதின் வாயிலாக இந்த ஆண்டு குடிநீர் வடிகால் வாரியம் லாபத்தில் இயங்கி உள்ளது. அதேநேரத்தில் நஷ்டத்தில் இயங்குவதாக தெரிவித்துள்ள போக்கு வரத்துதுறை, மின்வாரியம் ஆகியவற்றிற்கு தமிழக அரசு 20சதவிகித போனஸ் அறிவித் துள்ளது. ஆனால் லாபத்தில் இயங்கக்கூடிய இந்த குடிநீர் வடிகால் வாரிய பணியாளர்க ளுக்கு எப்பொழுதும் போல மாற்றான் தாய் மனதுடன் 8.33 சதவிகிதம் என்று அறிவித்துள் ளது. எனவே, அனைத்து வகை பணியாளர்க ளுக்கும் 20 சதவிகிதம் போனஸ் அறிவிக்க வேண்டும். என்கிற கோரிக்கை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை, விளாங்குறிச்சி சாலையில் உள்ள வினோபாஜி நகர், கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு குடிநீர் வடிகால் வாரிய தொழிற்சங்கத்தின் தலைவர் ஏ.பிரான் சிஸ் தலைமை வகித்தார். உதவித்தலைவர் எம்.பாலகுமார் கண்டன உரையாற்றினார். இதில், சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆர். சரவணன், நிர்வாகி சி.ஐயப்பன் உள்ளிட்ட திர ளானோர் பங்கேற்றனர். முடிவில், ரமேஷ் நன்றி கூறினார். ஈரோடு ஈரோடு, சூரம்பட்டி நால் ரோட்டில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு குடிநீர் வடி கால் வாரிய ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.குணசேகரன் தலைமை வகித் தார். இதில் சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ். சுப்ரமணியன், மாவட்டச் செயலாளர் ஸ்ரீராம், அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் சங்க பன் முகத் தலைவர் என்.முருகையா, குடிநீர் வடி கால் வாரிய ஊழியர் சங்க மாவட்ட பொதுச் செயலாளர் எஸ்.சி.பிரகாசம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.