districts

img

உப்பாறு ஓடையில் கொட்டப்படும் கழிவுகள்

திருப்பூர், செப். 9 - திருப்பூர் மாவட்டம் பெதப்பம் பட்டி அருகே உப்பாறு ஓடையில் கழி வுகள் கொட்டப்படுவதால் நீர்நிலை மாசடைந்து வருகிறது.  குடிமங்கலம் ஒன்றியத்தில் உள்ள பெரும்பாலான ஊராட்சிக ளின் வழியாக உப்பாறு செல்கிறது.  உப்பாறு ஓடையின் வழியாக தண் ணீர் செல்லும் போது குடிமங்கலம் பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர் கிறது. இதன் காரணமாக விவசா யிகள் கிணற்றுப் பாசனம் மூலம் காய் கறி சாகுபடியில் ஈடுபட்டு வருகின் றனர்.  உப்பாறு ஓடை வழியாக செல் லும் தண்ணீர் கடைசியாக உப்பாறு  அணைக்கு செல்கிறது. உப்பாறு  அணை மூலம் 3 ஆயிரம் ஏக்கர் நிலம்  நேரடியாக பாசன வசதி பெறுகிறது. இதுதவிர ஆயிரக்கணக்கான ஏக்கர்  நிலங்கள் மறைமுகமாகவும் பாசன  வசதி பெறுகிறது. உப்பாறு ஓடை தூர் வாரப்படாததால் பல இடங்களில் சீமை கருவேல மரங்கள் வளர்ந்து   புதர்மண்டி கிடக்கிறது. மேலும் உப் பாறு ஓடையில் பல இடங்களில் கழி வுகள், குப்பைகள் தொடர்ந்து கொட் டப்படுகிறது. இதனால் உப்பாறு ஓடை மாசடைந்து வருகிறது. உப் பாறு ஓடையில் நீர் செல்லும் இடங்க ளில் ஓடையின் குறுக்கே பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் கழிவு களை கொண்டு வந்து கொட்டி செல் கின்றனர். இதனால் பாலத்தின் அடிப் பகுதியில், தண்ணீர் செல்லும் நீர் வழித்தடங்களில் கழிவுகள் தேங்கி கிடக்கிறது. உப்பாறு ஓடையில் கழிவுகள் கொட்டப்படுவதால் நீர் மாசடைந்து வருகிறது. ஓடையில் கழி வுகளை கொட்டுபவர்கள் மீது உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும் என  பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள் ளனர்.