districts

img

இருளில் மூழ்கிய கிராமங்கள்: தீப்பந்தம் ஏற்றும் போராட்டம்

நாமக்கல், டிச.5- எலச்சிப்பாளையம் அருகே 10க்கு மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கிய தால், மின்வாரியத்தை கண்டித்து மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தீப்பந்தம் ஏற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளை யம் அருகே உள்ள கொண்ணையார், ஆயித்தாகுட்டை, கரியாம்பாளையம், சத்யா நகர், யூனியன் ஆபீஸ், ஓலப் பாளையம், செட்டிகுட்டைமேடு, எலி மேடு, பழயகரியாம்பாளையம்  உள் ளிட்ட பகுதிகளில் ஞாயிறன்று மதியம் 2 மணி அளவில் மின்சாரம் தடைப்பட் டது. ஆனால், இரவு 10 மணி வரை மின் சாரம் கிடைக்காததால் கொசுக்கடியால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டனர்.  இதையடுத்து, மின்வாரியத்தை கண் டித்து மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் கே.எஸ்.வெங்கடாசலம் தலைமையில் தீப்பந்தம் ஏற்றும் போராட் டம் நடைபெற்றது.  இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சு.சுரேஷ், ஒன்றி யக்குழு உறுப்பினர் பி.கிட்டுசாமி, மூத்த  தோழர் எஸ்.பெரியசாமி உட்பட அப் பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.