districts

img

மணல் கடத்தலை கண்டு கொள்ளாமல், ஆடு, மாடு மேய்க்க தடைபோடும் வனத்துறை

தருமபுரி, அக்.19- பாலக்கோடு அருகே மணல் கடத்திய வாகனங்களை கிராம மக்கள் சிறை பிடித்தனர்.  தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே சீங்காடு கிராமம் உள்ளது. இப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இக்கிராமத்தை ஒட்டி உள்ள காப்புக்காடு வனப் பகு திகளில் வழிந்தோடும் நீரோடை மற் றும் ஆற்றுப்பகுதிகளில் சட்ட விரோதமாக மணல் கடத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், புத னன்று அதிகாலை டிராக்டர், ஜேசிபி இயந்திரம்  மூலமாக  மணல் கடத்த லில் ஈடுபட்டனர். இதையறிந்த நூற் றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் மணல் கடத்திய வாகனங்களை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட னர். இத்தகவலறிந்த காவல்துறை, வருவாய்த்துறை, வனத்துறை அதி காரிகள் நேரில் சென்று பொதுமக்க ளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட னர். அப்போது காப்புகாடு பகுதியில் ஆடு, மாடு மேச்சலுக்கு செல்லக் கூடாது. மணல், மரங்கள் உள்ளிட்ட எந்த பொருள் திருட்டு நடைபெற்றா லும் கிராம மக்களே பொறுப்பேற்க வேண்டுமென வனத்துறை அதிகா ரிகள் கூறிவருகின்றனர். காப்புகாட் டில் அமைந்துள்ள ஈஸ்வரன் கோவில், மாரியம்மன் கோவிலுக்கு காலங்காலமாக வழிபட்டு வரும் பொதுமக்கள் தற்போது செல்லக்கூ டாது, கோவிலுக்கு செல்லும் பாதையை வனத்துறையினர் சேதப் படுத்துகின்றனர். ஆனால், மணல் கடத் தலை மட்டும் வனத்துறையினர் கண்டுகொள்ளாமல் உள்ளனர் என அதிகாரிகளிடம் பொதுமக்கள் தெரி வித்தனர். இதையடுத்து, அதிகாரி கள் பேச்சுவார்த்தைக்கு பிறகு மக் கள் போராட்டத்தை கைவிட்டனர். இந் நிலையில், மணல் கடத்தலில் ஈடு பட்ட ஐந்து டிராக்டர்கள் மற்றும் ஒரு  ஜேசிபியை  பறிமுதல் செய்தனர்.    

வனத்துறைக்கு சிபிஎம் கண்டனம் 

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலா ளர் ஏ.குமார் வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது, தரும புரி மாவட்டம், பாலக்கோடு வனப் பகுதியில் ஆற்று மணலை திருட் டுத்தனமாக எடுத்து வெளியிடங்க ளில் நடைபெறும் கட்டுமான பணி களுக்கு  ஒப்பந்ததாரர்கள் கொண்டு  சென்ற வனத்துறை ஊழியர்களை யும், 5 டிராக்டர் மற்றும் மணல் அள் ளிய ஜேசிபி வாகனங்களையும் சீங் காடு கிராமமக்கள்  முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். கிராம மக்களின் குலவழிபாடு கோயிலுக்கு செல்ல அனுமதி மறுக்கும் வனத் துறையினர் திருட்டுத்தனமாக மணலை அள்ளிசென்று விற்பனை செய்கின்றனர். அதேபோன்று பென்னாகரம் வட்டம், அனுமந்தராயன் கோம்பை கிராமத்தில் பல தலைமுறைகளாக வசித்துவரும் மக்களை வனத்துறை யினர் வெளியேற்ற முயற்சித்து வரு கின்றனர். மேலும் வனத்தையெட்டி உள்ள கிராமங்களில் வசிக்கும் மக் களை பொய்க் குற்றசாட்டு கூறி  வழக்கு பதிவதும், அபராதம் விதிக் கும் செயலில் வனத்துறையினர் ஈடு பட்டு வருகின்றனர். தருமபுரி மாவட் டத்தில் தொடர்ந்து சட்டத்தை மீறும் வனத்துறை அலுவலர்கள் மீது நட வடிக்கை எடுக்காமல், அவர்களை பாதுகாக்கும் மாவட்ட வன அலுவ லர் அப்பல்லோ நாயுடு ஈடுபடு கிறார். எனவே, மணல்கடத்திலில் ஈடு படுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வனத்துறை அலு வலர்கள் செய்யும் அத்துமீறிய செய லுக்கு துணைபோகும் மாவட்ட வன  பாதுகாப்பு அலுவலர் மீது நடவ டிக்கை எடுக்க தமிழக அரசும்,  மாவட்ட நிர்வாகமும் முன் வர  வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.