districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

பல லட்சம் லிட்டர் குடிநீர் வீண்!

ஈரோடு, ஜன.28- ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையிலிருந்து கடந்த சில ஆண்டு களுக்கு முன்பு ரூ.240 கோடி மதிப்பீட்டில் பெருந்துறை – கொடி வேரி கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது. இத் திட்டத்தில் நாள்தோறும் கொடிவேரி அணைப்பகுதியில் இருந்து ராட்சத மின் மோட்டார் மூலமாக பல லட்சம் லிட்டர்  தண்ணீர் எடுக்கப்பட்டு, பெருந்துறை முழுவதும் விநியோ கிக்கப்படுகிறது. இத்திட்டப்பணியில் குழாய் இணைப்பு  உள்ள இடங்களில் ஆங்காங்கே வால்வு பொருத்தப்பட் டுள்ளன. அவ்வாறு கோபி அருகே உள்ள குருமந்தூர் மேடு  மீனவர் காலனி அருகே பொருத்தப்பட்டு உள்ள குழாய் வால்வு வெள்ளியன்று இரவு உடைந்தது. இதனால் குழாயி லிருந்து அதிக அழுத்தத்துடன் வெளியேறிய பல லட்சம்  லிட்டர் தண்ணீர் சாலைகளில் ஓடி அருகில் உள்ள விவசாய  நிலங்களில் புகுந்தது. இரவு நேரத்தில் குழாய் வால்வு உடைப்பு ஏற்பட்டதால் பொதுமக்களுக்கு தெரியாத நிலை யில், சனியன்று காலை அங்கு வந்த பொதுமக்கள் வால்வு  உடைந்து குடிநீர் வீணாகி வருவதை கண்டு குடிநீர் திட்ட  அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். குழாய் வால்வு  உடைப்பு ஏற்பட்டு பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகி யதை கண்டு பொதுமக்கள் வேதனையடைந்தனர்.

வைக்கம் போராட்ட வரலாற்று கருத்தரங்கம்

தருமபுரி, ஜன.28- தருமபுரியில் வைக்கம் போராட்ட வரலாற்று கருத்த ரங்கம் நடைபெற்றது. தகடூர் அதியமான் வரலாற்று சங்கத்தின் சார்பில் வைக்கம்  போராட்ட வரலாறு குறித்து கருத்தரங்கம், தருமபுரி நினைவு  அறக்கட்டளை அலுவலகத்தில் நடைபெற்றது. கருத்தரங் கத்திற்கு தகடூர் அதியமான் வரலாற்று சங்கச் செயலா ளர் மருத்துவர் இரா.செந்தில் தலைமை வகித்தார். சங்க  நிர்வாகி கி.சம்பத்குமார் வரவேற்றார். தகடூர் புத்தக பேரவை  தலைவர் இரா.சிசுபாலன் தொடக்க உரையாற்றினார். ஆசி ரியர் பி.அறிவொளி வைக்கம் போராட்ட நூல்குறித்து பேசி னார். வைக்கம் போராட்டம் குறித்து ஆய்வாளர் பழ.அதி யமான் சிறப்புரையாற்றினார். இறுதியில் சங்கத்தின் நிர் வாகி திருநாவுக்கரசு நன்றி கூறினார்.

ஈரோட்டில் தலைகவச விழிப்புணர்வு பேரணி

ஈரோடு, ஜன.28- ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில், சத்தி காவல்  உட்கோட்ட காவல்துறை சார்பாக, தேசிய சாலை பாது காப்பு மாத விழாவையொட்டி, தலைகவசம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.  இதில், சத்தியமங்கலம், புளியம் பட்டி, பவானிசாகர், தாளவாடி பகுதி காவலர்கள் மற்றும்  அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர்கள் உள்ளிட்ட  நூற்றுக்கும் மேற்பட்டோர் பேரணியில் பங்கேற்றனர்.  விழிப்புணர்வு பேரணியை, சத்தியமங்கலம் உட்கோட்ட துணைக் காவல்கண்காணிப்பாளர் சரவணன் தலைமை யேற்று துவக்கி வைத்தார். காவல் ஆய்வாளர் முருகேசன்  மற்றும் சத்தி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வா ளர் ஹேமலதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  பேரணி, சத்தியமங்கலம் எஸ்.ஆர்.டி. கார்னரில் இருந்து  துவங்கி, மைசூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக, சென்று  அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், நிறைவு பெற்றது.

உதகையில் போக்குவரத்து நெரிசல்

உதகை, ஜன.28- தொடர் விடுமுறை காரணமாக உதகை யில் குவிந்த சுற்றுலாப் பயணிகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  மலைகளின் அரசி என்று அழைக்கப்படும்  நீலகிரி மாவட்டம் உலக சுற்றுலா வரைபடத் தில் இடம்பெற்றுள்ள மாவட்டமாகும். இம்மா வட்டத்திற்கு நாள்தோறும் ஆயிரக்க ணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை புரி வது வழக்கம். இந்நிலையில் குடியரசு தின  விழா என தொடர் விடுமுறை காரணமாக சுற் றுலா நகரமான உதகைக்கு அண்டை மாநி லங்களான கேரளா, கர்நாடகா மற்றும் சம வெளி பிரதேசங்களில் இருந்து சுற்றுலாப் பய ணிகள் குவிந்து வருகின்றனர். தங்களது சொந்த வாகனங்களிலும், சுற்றுலா வாக னங்களிலும் உதகைக்கு வருகை புரிந்துள்ள  சுற்றுலாப் பயணிகளால் உதகை நகரம் கடும்  போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தது.  குறிப்பாக உதகை - கூடலூர் தேசிய நெடுஞ் சாலை, உதகை - கோத்தகிரி தேசிய நெடுஞ் சாலை, சேரிங்கிராஸ், படகு இல்லம், மத்திய  பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்கள் அணிவகுத்து ஒன்றன்பின் ஒன்றாக நின்றதால் வாகன ஓட்டிகள் மற்றும்  உள்ளூர் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி னர்.

சாலை வசதி கேட்டு வாலிபர் சங்கம் மனு

ஈரோடு, ஜன.28- குலவிளக்கு ஊராட்சியில் சாலை வசதி கேட்டு இந்திய  ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மனு கொடுக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி ஒன்றியத்திற்குட்பட் டது குலவிளக்கு ஊராட்சி. இக்கிராம ஊராட்சியில் 13 ஆவது வார்டுக்குட்பட்டது கூட்டு எல்லைக்காடு பகுதி. இங்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தார் சாலை அமைக்கும் பணி தொடங் கியது. 130 நாட்களைக் கடந்தும் சாலை அமைக்கும் பணிகள் நிறைவடையவில்லை. இந்நிலையில் முழுமையாக பணிகள் முடிவுறாத சாலையின் வழியே சென்ற இரு மாணவர்கள் கீழே  விழுந்து காயம் ஏற்பட்டது. மேலும் அவ்வழியே செல்லும் வாகனங்களும் பழுதடைகின்றன. அத்துடன் உரிய நேரத் திற்கு குழந்தைகளும் பள்ளிக்கு சென்று திரும்ப முடிய வில்லை. எனவே, பாதியில் நின்ற சாலை பணியை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்றதாக விட வேண்டும் எனக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டப்  பொருளாளர் எம்.லோகநாதன் மற்றும் அப்பகுதி மக்கள் ஊராட்சி மன்ற தலைவரிடம் மனு அளித்தனர்.

அரூர் - கட்டரசம்பட்டி அரசு பேருந்தை மீண்டும் இயக்க மக்கள் வலியுறுத்தல்

தருமபுரி, ஜன.28- அரூரிலிருந்து செல்லம்பட்டி, கீளானூர் வழியாக கட்ட ரசம்பட்டி வரை சென்று வந்த அரசு பேருந்தை மீண்டும்  இயக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். தருமபுரி மாவட்டம், அரூரிலிருந்து சங்கிலி வாடி,  செல்லம்பட்டி, கீளானூர், பொய்யைப்பட்டி வழியாக கட்டர சம்பட்டி வரை செல்ல அரசு பேருந்து எண்:26 இயக்கப் பட்டு வந்தது. இதனால் 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள்  பயன்பெற்று வந்தனர். இந்நிலையில், திருவண்ணா மலைக்கு சிறப்பு பேருந்தாக பேருந்து எண்:26ஐ இயக்கப்பட்ட தாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். அதன்பின் இந்த பேருந்து மேற்கண்ட கிராமங்களுக்கு இயக்கப்படவில்லை. பேருந்து நிறுத்தப்பட்டதாக பொதுமக்கள் கவலையுடன் தெரிவித்துள்ளனர். மேலும், பேருந்து வரும் என நம்பி பேருந்து நிலையத்திலேயே பெண்கள் காத்திருக்கும் அவல நிலை உள்ளது. எனவே, அரசு பேருந்து எண்:26ஐ மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட நிர்வா கத்தை அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மரங்களில் ஆணி அடித்து விளம்பரம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

உடுமலை, ஜன.28- தனியார் நிறுவனங்கள் லாபம் பெரும் வகையில் அரசுக்கு சொந்தமான மரங்களில் ஆணி அடித்து விளம்பரப் பலகைகளை வைக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி யுள்ளனர். நெடுச்சாலையோரங்கள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள இடங்களில், அரசு சார்பில் மரங்கள் நடப்பட்டு உள்ளது. பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கும் மரங்களை பாதுகாக்க அரசு சார் பில் பொதுபணித்துறை மற்றும் நெடுச்சா லைத்துறையினர் செய்து வருகிறார்கள். சாலையோரங்களில் இருக்கும் மரங்கள் வீட்டுமனை மற்றும் தொழிற்சாலைகளுக்கு இடையூறாக இருப்பதால், தங்களுடைய  சுயநலனுக்காக பல இடங்களில் மரங்களில்  திரவகம் (அமிலம்) ஊற்றி காயவைத்து வரும் நிலையில், தற்பொழுது தனியார் நிறுவனங் கள் தங்களுடைய விளம்பரப் பலகையை மரத் தில் ஆணி அடித்து வைத்துள்ளதால், மரங் கள் சேதமடையும் நிலையில் உள்ளன. ஏற்க னவே தனிநபர் சுயநலனுக்காக பல  மரங்கள் வெட்டபட்ட நிலையில், தற்பொழுது ஆணி அடித்து மரங்களை சேதப்படுத்து வர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

வரி செலுத்தாததால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

கோவை, ஜன.28- கோவை மாநகராட்சியில் வரி செலுத்தா மல் இருந்து வந்த  5 வணிகக் கட்டிடங்களின் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ள தாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள் ளது. கோவை மாநகராட்சிக்கு செலுத்த வேண் டிய சொத்து வரி, காலியிட வரி, தொழில் வரி மற்றும் குடிநீர் கட்டணம் உள்ளிட்ட வரி வசூ லில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகி றது. இந்நிலையில் வரி செலுத்த பொதுமக்க ளின் வசதி கருதி மாநகராட்சியின் வார்டு பகுதி களில் திங்களன்றும் (இன்று) சிறப்பு வரி வசூல் முகாம்கள் நடத்தப்படுகிறது. கிழக்கு மண்ட லத்திற்குட்பட்ட வார்டு எண். 56, 57ல் ஒண்டிப் புதூர் சுங்கம் மைதானம் பகுதிகளிலும், மேற்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்  75ல் மாரியம்மன் கோவில் தெரு சீரநாயக் கன்பாளையத்திலும், தெற்கு மண்டலத்திற் குட்பட்ட வார்டு எண். 85ல் போத்தனூர் கோண வாய்க்கால்பாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியிலும், வார்டு எண்.87-ல் குனியமுத் தூர் அனைத்து குடியிருப்பு நல சங்கங்களின் கூட்டமைப்பு அலுவலகம், அம்மன் கோவில் சாலையிலுள்ள வணிக வளாகத்திலும், வடக்கு மண்டலம் வார்டு எண். 15 சுப்ரம ணியம்பாளையம் அங்கன்வாடி மையத்தி லும், மத்திய மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்.32ல் சிறுவர் பூங்கா, சங்கனூர் நாராயண சாமி வீதியிலும், வார்டு எண்.84ல் ஜி.எம்.நக ரில் உள்ள தர்கத் இஸ்லாம் பள்ளியிலும் சிறப்பு வரி வசூல் முகாம்கள் நடைபெறு கிறது. எனவே, மக்கள் இதை பயன்படுத்தி கொண்டு, முறையாக வரி செலுத்துமாறு மாந கராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதே நேரம் வரி செலுத்தாமல் காலதாமதம் செய் தால், குடிநீர் உள்ளிட்ட இணைப்புகள் துண் டிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.

மேட்டூர் அருகே சாலை விபத்து: கணவன், மனைவி பலி

சேலம், ஜன.28- மேட்டூர் அருகே சாலை விபத்தில் கணவன் - மனைவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், மேட்டூரை அடுத்த குஞ்சாண்டியூர் புதூரைச் சேர்ந்தவர் அழகேசன் (29). இவரது மனைவி இளமதி (25). இவர்கள் இருவரும் ஞாயிறன்று காலை குழந்தைகள் கிஷோர் (5), திருத்தி (2) ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் பண்ணவாடியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். ராமன் நகர் அருகே வந்தபோது, பின்னால் அதிவேகமாக வந்த லாரி இவர்களது வாகனத்தின் மீது மோதியது. இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கி கணவன் - மனைவி இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குழந்தைகள் இருவரும் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். இதில் கிஷோருக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. மேட்டூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பிறகு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். கணவன் - மனைவி இருவரது உடல்களையும், கருமலைகூடல் காவல் துறையினர் மீட்டு, மேட்டூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைத்துள்ளனர். இவ்விபத்து காரணமாக மேட்டூர், மேச்சேரி சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து தடைப்பட்டது. காவல் துறையினர் விபத்துக்குள்ளான இருசக்கர வாகனத்தையும், லாரியையும் அப்புறப்படுத்திய பிறகு போக்குவரத்து சீரானது.

காவல் ஆய்வாளர் பொறுப்பேற்பு

நாமக்கல், ஜன.28- நாமக்கல் மாவட்டம், பர மத்திவேலூர் தாலுகா, பர மத்தி காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த ரவி, பணி யிட மாற்றம் செய்யப்பட் டார். இதையடுத்து சேலம் மாவட்டம், கிச்சிபாளையம் காவல் ஆய்வாளராக பணி யாற்றி வந்த ராதாகிருஷ் ணன், பரமத்தி காவல் நிலை யத்திற்கு மாறுதல் செய்யப் பட்டார். இதையடுத்து அவர் பரமத்தி காவல் நிலையத் தில் பொறுப்பேற்றுக் கொண் டார். அவருக்கு சக அதிகாரி கள் வாழ்த்து தெரிவித்தனர்.