districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

மண் சரிவால் உதகை மலை ரயில் ரத்து

மேட்டுப்பாளையம், மே 18- கனமழையால் மலை ரயில் பாதையில் ஏற்பட்ட மண்  சரிவு ஏற்பட்டு மே 20 ஆம் தேதி வரை உதகை மலை ரயில் ரத்து செய்யப்பட்டது. கோவை மாவட்டம்,  மேட்டுப்பாளையத்தில் இருந்து  உதகைக்கு தினமும் மலை ரயில் போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது. இம்மலை ரயில் பாதை அமைந் துள்ள பகுதி அடர்ந்த வனப்பகுதியில் உள்ளது. குறிப் பாக கல்லார் முதல் குன்னூர் வரை அடர்ந்த வனப்பகுதி யில் உள்ள மலை முகடுகள்  காட்டாறுகள் கடந்து பாறை  குகைகளின் வழியாக செல்லும் இந்த ரயிலில் பய ணிக்க சுற்றுலாப் பயணிகள் மிகுந்த ஆர்வம் காட்டி வரு கின்றனர். தற்போது நீலகிரி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மலை ரயில் பாதை அமைந்துள்ள வனப்பகுதியில் வெள்ளியன்று இரவு கனமழை பெய்தது. இதனால் மலை ரயில் பாதை அமைந்துள்ள ஆடர்லி, ஹில்கிரோ போன்ற பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டு ரயில் தண்டவாளம் மண்ணால் மூடப் பட்டு சேதமடைந்தது. இதனால் சனியன்று காலை முதல் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் புறப்பட வேண்டிய மலை ரயில் போக்குவரத்து மே 20 ஆம் தேதியன்று வரை ரத்து செய்வதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

முறைகேடாக தங்கி இருந்த வங்கதேசத்தினர் கைது

திருப்பூர், மே 18- திருப்பூரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் முறை கேடாக தங்கியிருந்த வங்கதேச வாலிபர்கள் மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்தனர். இவர்களி டம் இருந்து போலி ஆதார் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. தொழில் நகரமான திருப்பூரில் பல்வேறு மாவட்டத் தைச் சேர்ந்த தொழிலாளர்களும், வெளி மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களும் தங்கி வேலை செய்து வருகின்றனர். இதில், வட மாநில தொழிலாளர்கள் போல, வங்காள தேசத்தைச் சேர்ந்தவர்களும் போலி யான ஆவணங்களை தயாரித்து திருப்பூரில் தங்கி வேலை செய்து வருகின்றனர். இவர்களை போலீ சார் அவ்வபோது சோதனை நடத்தி கைது செய்கின்ற னர். இந்நிலையில் முத்தணம்பாளையம், செவந்தாம் பாளையம் பகுதிகளில் வடமாநில தொழிலாளர்களுடன் சேர்ந்து வங்காளதேசத்தை சேர்ந்த வாலிபர்களும் சட்ட விரோதமான முறையில் தங்கி இருப்பதாக நல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, சனியன்று தனிப்படை போலீசார் அவர்கள் தங்கி இருக்கும் பகுதிகளில் சோதனை நடத்தி னர். அப்போது பாஸ்போர்ட், விசா போன்ற ஆவணங்க ளும் இல்லாமல் முறைகேடாக தங்கியிருந்த 3 வங்காள தேச இளைஞர்களை கண்டறிந்தனர். அவரிகளிடம் விசாரித்தபோது மூன்று பேரும் கடந்த நான்கு மாதங்க ளுக்கு முன்பு திருப்பூர் வந்து, பனியன் கம்பெனியில் வேலை செய்து வருவது தெரிய வந்தது. ரூபேல் (28),  நஷ்ரூல் இஸ்லாம் (26), பைசல் அகமது (35) ஆகிய  இந்த மூவரும் பனியன் நிறுவனத்தில் மேற்கு வங்கா ளத்தில் போலியாக தயாரித்த ஆதார் கார்டுகளைக் கொடுத்து வேலைக்கு சேர்ந்தது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து மூவரையும் போலீசார் கைது செய்தனர். இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வதந்திகளை நம்ப வேண்டாம் காவல் ஆணையர் அறிவுறுத்தல்

சேலம், மே 18- வேலை தருவதாகவோ அல்லது வேறுவகையிலோ பணம் கேட்டு வரும் பொய்யான தகவல்களை நம்ப வேண்டாம் என சேலம் மாநகரக் காவல் ஆணையர் விஜயகுமாரி அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில், அடையாளம் தெரியாத நபர்கள் யாரேனும் கைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு பகுதிநேர வேலை  இருப்பதாகக் கூறினாலோ, தான் மருத்துவர் என கூறிக் கொண்டு, நீட் தேர்வு மூலம் மருத்துவப்படிப்புக்கான இடம் வாங்கித் தருவதாக கூறினாலோ, யாரும் நம்ப  வேண்டாம். மேலும், பங்குச் சந்தை, முதலீடு தொடர் பான ஆலோசனை, ஆன்லைன் மூலம் கடன் பெற்றுத் தருவதாகக் கூறினாலோ ஏமாற வேண்டாம். மேலும், தன்னை காவல் அதிகாரி எனக்கூறிக்கொண்டு, தங்கள்  ஆதார் விவரங்களைக் கூறி சட்டவிரோத பார்சல், ஆபா சப் படங்கள், போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி, பணம் கேட்டு மிரட்டி னாலோ யாரும் நம்ப வேண்டாம். போன் கால், வாட்ஸ் ஆப், பேஸ்புக், டெலிகிராம், இன்ஸ்டாகிராம், மின்னஞ்ச லில் வரும் தகவலை நம்பி பொதுமக்கள் யாரும் ஏமாற வேண்டாம். இதுதொடர்பாக யாரேனும் பணத்தை இழந் திருந்தால் 1930 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார ளிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விளம்பர பேனர்களால் வாகன ஓட்டிகள் அவதி

நாமக்கல், மே 18- கவனத்தை திசை திருப்பும் விளம்பர பேனர்களால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக் குள்ளாகி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் -  பவானியை இணைக்கும் வகையில் சிறிய அளவிலான பாலம் ஒன்று உள்ளது. கனரக வாகனங்கள், பேருந்துகள் உள்ளிட்ட வாக னங்கள் செல்வதற்கு ஏதுவாக இல்லாத இந்த சிறிய அளவிலான பாலத்தின் வழியாக ஏராள மான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த பாலத்தின் நுழைவுப்பகுதியில் கல்வி  நிலையங்கள், கடை விளம்பரங்கள், சினிமா போஸ்டர்கள் என பல்வேறு தரப்பி லான விளம்பர பேனர்கள் பதாகைகள் வைக் கப்பட்டுள்ளன. இதன் காரணமாக காவிரி ஆற்று நுழைவுப்பாலம் விளம்பரம் மைய மாக மாறி உள்ளது. மேலும், விளம்பர பேனர் களை வேடிக்கை பார்த்து செல்லும் வாகன ஓட்டிகள் கவனம் சிதறுவதால், அடிக்கடி விபத்துக்குள்ளாகும் சம்பவம் நடைபெறு கிறது. எனவே, இந்த இடத்தில் பேனர்கள் கட் டுவதற்கு நகராட்சி நிர்வாகம் தடை விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெள்ளைக்கழிச்சலால் கோழிகள் இறப்பு

வெள்ளைக்கழிச்சலால் கோழிகள் இறப்பு நாமக்கல், மே 18- வெள்ளைக்கழிச்சல் நோய் பாதிப்பால் கோழிகள் இறப்பு நேரிடுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில், கடந்த வார வானிலையைப் பொருத்தமட்டில் பகல் வெப் பம் 101.3 டிகிரியாகவும், இரவு வெப்பம் 64.4 டிகிரியாகவும் காணப்பட்டது. வரும் நாட்களில் வானம் லேசான மேகமூட் டத்துடன் காணப்படும். மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் மிதமான மழை எதிர்பார்க்கப்படுகிறது. பகல் வெப்பம் 93.2 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 69.8 டிகிரியாகவும் காணப்படும். காற்று மேற்கு திசையில் இருந்து மணிக்கு 10  கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். கடந்த வாரம் கோழியின நோய்  ஆய்வகத்தில் இறந்த கோழிகளை பரிசோதனை செய்ததில், அவை வெள்ளைக்கழிச்சல் நோய்த் தாக்குதலுக்குள்ளாகி இறந்துள்ளது தெரியவந்துள்ளது. கோழிகளுக்கு சீரான இடைவெளியில் நோய் எதிா்ப்பு சக்தி உள்ளதா? என்பதை பரிசோதனை செய்ய வேண்டும். அவ்வாறு குறைவாக இருந் தால், அதற்கேற்ப தடுப்பூசி செலுத்த வேண்டும் என அறிவு றுத்தப்பட்டுள்ளது.

போதை மாத்திரையால் பள்ளி மாணவன் உயிரிழப்பா?

சேலம், மே 18- உடல்நலக்குறைவால் சேலம் அரசு மருத்துவமனையில் அனும திக்கப்பட்ட பள்ளி மாணவன் உயிரி ழந்த நிலையில், போதை மாத்திரை யால் உயிரிழந்ததாக அதிர்ச்சி தக வல் பரவி வருகிறது. சேலம் மாவட்டம், பவானி அருகே உள்ள ஒரிச்சேரிப்புதூர் தூய்மைப்பணியாளரின் மகன், அருகே உள்ள அரசுப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார். தேர்வு  விடுமுறையில் வீட்டிலிருந்த இவர், கடந்த மே 10 ஆம் தேதி பால் குடித்த போது உடல்நலக்குறைவு ஏற்பட் டது. இதையடுத்து, பவானி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட் டார். அங்கிருந்து, ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட மாணவர், உயர் சிகிச்சைக் காக சேலம் அரசு மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டார். இந்நிலை யில், சிகிச்சை பலனின்று மாண வர் வெள்ளியன்று உயிரிழந்தார். இதுகுறித்து, ஆப்பக்கூடல் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர். இந்நிலையில், போதை மாத்திரை சாப்பிட்டததால் தான்  உயிரிழந்ததாக தகவல் பரவிய தைத் தொடர்ந்து, பிரேதப் பரிசோ தனை நடத்தப்பட்டது. இதன் முடிவு கள் வந்த பின்னரே முழு விவரம் தெரியவரும் என காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  தாயார் புகார் இந்நிலையில், மகனின் மர ணத்திற்கு நீதி கேட்டு அவரது தாயார் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் மனு அளித்தார். அதில், எனது கணவர் காலமாகி 4 ஆண்டு கள் கடந்து விட்டது. நான் ஒரிச்சேரி புதூர் ஊராட்சியில் தூய்மைப் பணி யாளராக வேலை செய்து கொண்டு, பிள்ளைகளுடன் வசித்து வருகின் றோம். இந்நிலையில் கடந்த 10  ஆம் தேதியன்று மகன் மயக்க மாகி இருக்கிறான் என மகள் செல் போனில் தெரிவித்தார். அதனடிப்ப டையில் பவானி அரசு மருத்துவம னையில் சிகிச்சைக்கு சேர்த் தோம். இதற்கிடையில் நடந்த விபரங் கள் குறித்து அக்கம் பக்கத்தில் விசாரித்த போது, என் மகனை அழைத்துச் சென்று கஞ்சா உள் ளிட்ட போதைப் பொருளை பாலில்  கலந்து கொடுத்துள்ளார்கள். அதன்பிறகு என் மகன் மயங்கிய நிலையில் வீட்டில் விட்டு சென் றான் எனத் தெரியவருகிறது. இவ் வாறு எனது மகன் மரணத்திற்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.


 

;