districts

உதகை மலர் கண்காட்சி: கட்டணம் குறைப்பு

உதகை, மே 15- சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்த தால், உதகை மலர் கண்காட்சிக்கான நுழை வுக்கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களை கண்டு ரசிக்கவும், இங்கு நிலவும் குளுமையான கால நிலையை அனுபவிக்கவும் ஆண்டுதோறும் ஏராள மான சுற்றுலாப் பயணிகள் வருகை தரு கின்றனர். குறிப்பாக, ஏப்ரல், மே மாதங்க ளில் உதகையில் நடத்தப்படும் கோடை விழா என்ற பெயரில் ஒவ்வொரு ஆண்டும் மலர்  கண்காட்சி, ரோஜா கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு வகையான கண்காட்சிகளை காண  லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். ஒரே நேரத்தில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதால், அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படு கிறது. மேலும், பசுமையான சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு நீலகிரிக்கு சுற்றுலாப் பயணிகள் வருவதற்கு இ-பாஸ் நடைமுறையை கடந்த  மே 7 ஆம் தேதியன்று சென்னை உயர்நீதி மன்றம் அறிவுறுத்தலின்படி தமிழக அரசு அமல்படுத்தியது. இதனையடுத்து, நீலகிரி மாவட்டம் உதகையில் கடந்த 10 ஆம் தேதி யன்று மலர் கண்காட்சி மற்றும் ரோஜா கண்காட்சி தொடங்கியது. வழக்கமாக கோடை மாதம் மற்றும் மலர்  கண்காட்சியை பார்ப்பதற்காக லட்சக்கணக் கான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம்.  இதனால் இந்த மாதம் முழுவதும் நீலகிரி மாவட்டமே களைகட்டி காணப்படும். ஆனால், இந்த ஆண்டு இ-பாஸ் நடைமுறை காரணமாக சுற்றுலாப் பயணிகள் வருகை வெகுவாக குறைந்து விட்டது. ஒவ்வொரு நாளும் குறைந்த அளவிலான சுற்றுலாப் பயணிகளே வருகின்றனர். இந்நிலையில், சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவு காரணமாக மலர் கண்காட்சிக்கான நுழைவு கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. பெரியவர்களுக்கு ரூ.150 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. தற்போது ரூ.125 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உதகை வியாபாரிகள் சங்க  மாவட்ட நிர்வாகி பரூக் என்பவர் கூறுகை யில், ஒவ்வொரு ஆண்டும் நீலகிரியில் நடக் கும் கோடைவிழாவை காண வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருவார்கள். இதனால் இந்த ஒரு  மாதம் முழுவதும் நீலகிரியில் வியாபாரமும்  நன்றாக நடக்கும். வழக்கமாக கோடை விழா வின் போது நடக்கும் மலர் கண்காட்சியை காண ஏராளமானோர் வருவார்கள். ஆனால்,  இந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட இ-பாஸ் நடைமுறையால் நீலகிரிக்கு வரும் சுற்றுலாப்  பயணிகள் வருகை குறைந்து விட்டது. இங்குள்ளவர்களுக்கு எளிதாக இ-பாஸ் கிடைத்து விடுகிறது. வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு விண்ணப்பித்த உடன் இ-பாஸ் கிடைப்பதில்லை. பலமுறை  முயற்சி செய்த பின்னரே கிடைப்பதாகவும், அதானாலேயே பலரும் இங்கு வருவதை தவிர்த்து வருகின்றனர், என்றார்.

;