வெள்ளி, பிப்ரவரி 26, 2021

districts

img

உதவித் தொகையை அதிகரிக்க வலியுறுத்தி

கோவை, பிப். 23–

 உதவித்தொகையை அதிகரிக்க வேண்டும் என் பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற் றும் பாதுகாப்போர் உரி மைகளுக்கான நலச்சங் கத்தினர் செவ்வாயன்று அரசு அலுவலகத்தில் குடி யேறும் போராட்டத்தில் ஈடு பட்டனர். தமிழக அரசு சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு  வழங்கப்படும் ரூ.1000  உதவித்தொகை தற்போ தைய விலைவாசி உயர் வுக்கு போதுமானதாக இல்லை. ஆகவே,  கேரளா, தெலுங்கானா மாநிலத்தில் வழங்கப்படுவதை போல உதவித்தொகையை ரூ. 3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். வாடகை வீட் டில் குடியிருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச வீடுகள் வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு என தனித்துறை அமைக்க வேண்டும் என்பன உள் ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ் நாடு அனைத்துவகை மாற் றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக ளுக்கான நலச்சங்கத்தினர் மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்களில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் ஒருபகுதியாக, கோவையில் செவ்வாயன்று தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குடியேறும் போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.புனிதா தலைமை வகித் தார். இதில், மாவட்ட துணைச் செயலாளர் சிவகாமி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்ற னர்.

திருப்பூர்

திருப்பூர் மாவட்ட ஆட்சியரகம் எதிரில் உள்ள பேருந்து நிறுத்தம் முன்பு நடைபெற்ற குடியேறும் போராட்டத்திற்கு மாற்றுத்திற னாளிகள் சங்க மாவட்டச் செயலாளர் பா. ராஜேஷ் தலைமை வகித்தார். இதில், மாவட் டத் தலைவர் டி.ஜெயபால், பொருளாளர் ஆர்.காளியப்பன், துணைத் தலைவர் ஏ. மாலினி, ஜே.ரமேஷ், துணைச் செயலாளர் கள் ஜார்ஜ் வர்க்கீஸ், குருசாமி மற்றும் சின்னசாமி, கமலக்கண்ணன், லோகநா தன், பாண்டியன் உள்ளிட்ட 250க்கும் மேற் பட்டோர் கலந்து கொண்டனர். மேலும், இப் போராட்டம் தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும். இதே இடத்தில் காத்திருப் போம், கலைந்து செல்லப் போவதில்லை என்றும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில், பவானி, அந்தி யூர், சத்தியமங்கலம், மொடக்குறிச்சி வட் டாட்சியர் அலுவலங்களில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மாற் றுத்திறனாளிகள் சங்க மாவட்டத் தலைவர் தண்டபாணி, மாவட்டச் செயலாளர் டி. சுப்பிரமணி, மாவட்டப் பொருளாளர் சின் னச்சாமி, உதவித் தலைவர்கள் வீ.ராஜூ, ஏ.பி.ராஜூ, மாவட்ட உதவிச் செயலாளர் எஸ்.ஏ.ராமதாஸ், அந்தியூர் தாலுகா தலை வர் டி.சாவித்திரி உள்ளிட்ட 400க்கும் மேற் பட்டோர் கலந்து கொண்டனர்.

தருமபுரி

தருமபுரி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சி யரகம், அரூர், நல்லம்பள்ளி, பாப்பிரெட்டிப் பட்டி, பாலக்கோடு, பென்னாகரம் ஆகிய பகுதியில் உள்ள அரசு அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட் டத்தில் ஈடுபட்டனர். இதில், மாற்றுத் திறனாளிகள் சங்க மாநிலப் பொருளாளர் கே.ஆர்.சக்கரவர்த்தி, மாநிலக்குழு உறுப்பி னர் தமிழ் செல்வி, மாவட்டச் செயலாளர் கே.ஜி.கரூரான், சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் எம்.மாரிமுத்து, இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் நா.தமிழமுதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;