சேலம், டிச.6- சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் 20 ஆவது பட்டமளிப்பு விழா நடை பெற்றது. சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் 20 ஆவது பட்டமளிப்பு விழா திங்களன்று நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி கலந்து கொண்டு, முதுமுனைவர் பட்டம் பெறும் ஆறு பேருக்கும், முனைவர் பட்ட ஆய்வை நிறைவு செய்துள்ள 575 மாணாக் கர்களுக்கும் தங்கப் பதக்கத்துடன், பட்டச் சான்றிதழ்களை வழங்கினார். மேலும், பெரியார் பல்கலைக் கழகத் துறைகள் மற்றும் இணைவு பெற்ற கல்லூரிகளில் ஆய்வியல் நிறைஞர், முதுகலை மற்றும் இளங்கலைப் பாடங்களில் முதலிடம் பிடித்த 196 மாணாக்கர்களுக்கும் பதக்கம் மற்றும் பட்டச் சான்றிதழை விழா மேடை யில் வழங்கினார். பெரியார் பல்கலைக் கழகத் துறை களில் முதுகலை பாடப்பிரிவில் முதலிடம் பிடித்த 55 மாணாக்கர்களுக்கும், இளங் கலை பாடப்பிரிவில் நால்வருக்கும், இணைவு பெற்றக் கல்லூரிகளின் முது கலை பாடப்பிரிவில் 61 மாணாக்கர் களுக்கும், இளநிலை பாடப்பிரிவில் 76 மாணாக்கர்களுக்கும் தங்கப் பதக்கத்து டன் பட்டச் சான்றிதழை வழங்குகினர். தொடர்ந்து 2019-2020 மற்றும் 2020-2021 ஆம் கல்வியாண்டில் தேர்ச்சிப்பெற்ற மாணவ, மாணவிகளுக்கு இவ்விழாவில் பட்டங்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் இரா.ஜெக நாதன் மற்றும் உயர்கல்வித் துறை அதிகா ரிகள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்ட னர்.