தருமபுரி, மே 26- மக்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க போதிய நிதி ஒதுக்கவில்லை என கூறி, தருமபுரி ஊராட்சி ஒன்றியகுழு கூட்டத்தில் இருந்து ஒன்றிய கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். தருமபுரி ஊராட்சி ஒன்றியத்தில் 28 ஊராட்சிகள் உள்ளன. ஒன்றியத்தில் மொத்தம் 24 ஒன்றிய கவுன்சிலர்கள் உள்ளனர். இந்நிலையில், வெள்ளியன்று தருமபுரி வடடார வளர்ச்சி அலு வலக கூட்டரங்கில் ஒன்றிய கவுன்சிலர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. இதில், கடந்த 3 ஆண்டுகளாக கவுன்சிலராக உள்ளோம். நாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதியில் குடிநீர், சாலை வசதி, சுகாதார வளாகம், சிறுபாலம் உள்ளிட்ட பிரச் சனைகளுக்காக மக்கள் எங்களை அனுகுகின்றனர். ஆனால், போதிய நிதி இல்லாததால் பணிகள் செய்ய முடிவதில்லை என குற்றஞ்சாட்டி, 22 கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.