ஈரோடு, ஜுலை 19- ஆசிரியர் மரணத்தில் சந்தேகம் இருப்பதால், உண்மையை வெளிக்கொணர வேண்டும் என உறவினர்கள் ஈரோடு மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்பியிடம் மனு அளித்துள்ளனர். நாமக்கல் மாவட்டம், மோக னூர் அருகே கொமாரபாளையத் தைச் சேர்ந்த கார்த்திக் ஈரோடு மாவட்டம், பாசூர் அரசு மேல் நிலைப் பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்து பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், கடந்த ஞாயி றன்று இரவு வழக்கம் போல உறங்கச் சென்றவர் மறுநாள் சோளக்காளிபாளையம் பகுதி யில் ரயில்பாதையில் உடல் சிதைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவி னர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகை யில், ஆசிரியர் மரணமடைந்த அதே நாளில், பாசூர் அருகேயுள்ள சாஸ்திரி நகரைச் சேர்ந்த செந்தில் என்பவர் பாசூர் பள்ளிக்குச் சென்று தலைமை ஆசிரியரிடம், தனது மகளுக்கும் கார்த்திக் என்ற ஆசிரி யருக்கும் பழக்கம் ஏற்பட்டுள் ளதாகத் தெரிகிறது எனக் கூறி வாக்குவாதம் செய்துள்ளார். முதல் நாள் இரவு செல்போன் அழைப்பில் கார்த்திக் வெளியே சென்றுள்ளார். ஆனால் இன்று வரை அவரது செல்போன் கிடைக்க வில்லை. செல்போன் அழைப்பு யாரிடமிருந்து வந்தது என்பதை கண்டுபிடித்தால் இவர் மரணத் திற்கான காரணமான துப்புக் கிடைக்க வாய்ப்பு உள்ளது. கார்த்திக்கை செல்பேசியில் அழைத்து வீட்டை விட்டு வெளியே வரச்செய்து, எங்கோ அழைத்துச் சென்று கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எங்களுக்கு ஏற் பட்டுள்ளது. ரயில்வே காவல் துறை யினர், எனது தம்பியின் இரு சக்கர வாகன பதிவெண் மூலம் சிலம்ப ரசனுக்குத் தகவல் தெரிவித்தனர். கார்த்திக்கிற்கு அந்த வண்டியை வாங்கிக் கொடுத்த அவர் தான் எங்களுக்கு தகவல் கொடுத்தார்.
அவர் சொன்ன பிறகு தான் எங்க ளுக்கு நடந்த சம்பவம் தெரியும். கார்த்திக்கின் உடலில் இருந்த காயம், கால் வெட்டப்பட்ட நிலை, கைகளின் இரு மணிக்கட்டுப் பகுதியிலும் வெட்டியிருந்தது, இரு சக்கர வாகனம் சாலையின் அருகே வயலில் நிற்க வைக்கப் பட்டிருந்தது, அந்த வாகனத்தில் பல இடங்களில் ரத்தக்கரை படிந் திருந்தது ஆகிய அனைத்தும் மேலும் சந்தேகத்தை ஏற்படுத்து கின்றன. ஆகவே மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் கார்த்திக்கின் மரணம் கொலையா? என்பதையும், அதிலும் பாசூர்- சாஸ்திரி நகர் செந்தில் மற்றும் அவரது கூட்டாளி பாஸ்கரன் ஆகியோரா என்பதை யும், கண்டுபிடிக்க வேண்டும். மேலும், கார்த்திக் முதுநிலை ஆசிரியர் என்பதாலும் இன்னும் 30 ஆண்டுகள் பணிபுரியும் வாய்ப்பு இருப்பதாலும், பணிபுரியும் காலத் திற்கான ஊதியத்தைக் கணக்கிட்டு எங்கள் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும். அத்துடன் நானும், எனது இரண்டாம் தம்பி யும் பத்தாம் வகுப்பு வரை படித்துள் ளதால் யாராவது ஒருவருக்கு கல்வித் துறையில் கருணை அடிப் படையில் வேலை பெற்றுத் தரவும் உத்திரவிட வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனர். சகோதரர் சாமிநாதன், தாய், தந்தை மற்றும் சகோதரருடன் சென்று மனு அளித்தனர். இவர்கள் மனு அளிக்கையில், தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத் தலைவர் பி.பி.பழனிச் சாமி, மாவட்டச் செயலாளர் எம். அண்ணாதுரை, சிபிஎம் கொடுமுடி -தாலுகா செயலாளர் கே.பி.கனக வேல் மற்றும் கே.தங்கமணி ஆகி யோர் உடனிருந்தனர்.