districts

img

நிபந்தனையின்றி கடன்: விவசாய தொழிலாளர் சங்கம் வலியுறுத்தல்

தருமபுரி, அக்.17- விவசாய தொழிலாளர்களுக்கு நிபந்தனையின்றி கடன் வழங்க வேண்டும் என அகில இந்திய விவ சாய தொழிலாளர் சங்கம் வலியு றுத்தி உள்ளது. அகில இந்திய விவசாய தொழி லாளர் சங்கத்தின் அரூர் ஒன்றிய 4  ஆவது மாநாடு கையலாயபுரத்தில் தோழர் வி.ஆறுமுகம் நினைவரங்கத் தில்  ஒன்றிய தலைவர் எம்.தங்கராஜ் தலைமையில் நடைபெற்றது. சங் கத்தின் கொடியை எம்.சென்னு ஏற்றி வைத்தார். பி.சொக்கலிங்கம் அஞ் சலி தீர்மானத்தை வாசித்தார். மாநாட்டை துவக்கி வைத்து மாவட்ட துணைத்தலைவர் கே.கோவிந்த சாமி உரையாற்றினார். ஒன்றிய செய லாளர் கே.குமரேசன், பொருளாளர் டி.ஜடையாண்டி ஆகியோர் அறிக் கைகளை முன்வைத்தனர். மார்க் சிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் பி.குமார், கரும்பு வெட்டும் தொழிலா ளர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் இ.கே.முருகன் ஆகியோர் வாழ்த்து ரையாற்றினர்.

இம்மாநாட்டில், அரூர் வட்டத் தில் உள்ள நிலமற்ற விவசாய தொழி லாளர்களுக்கு 2 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும். அரூர் பேரூராட்சி 100 நாள் வேலை திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். வீடற்ற மக்களுக்கு வீடு கட்டித்தர வேண்டும். விவசாய தொழி லாளர்களுக்கு அனைத்து வங்கிகளி லும் நிபந்தனையின்றி கடன் வழங்க வேண்டும். விவசாய தொழிலாளர் கள் வாழும் அனைத்து பகுதிகளுக் கும் நடமாடும் கால்நடை மருத்துவ மனை அமைக்க வேண்டும். 60 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பென்சன் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து சங்கத்தின் ஒன்றிய தலைவராக டி.ஜடை யாண்டி, ஒன்றிய செயலாளராக கே. குமரேசன், பொருளாளராக பி.வீரப் பன் உட்பட 21 பேர் கொண்ட ஒன்றி யக்குழு தேர்வு செய்யப்பட்டது. மாநாட்டை நிறைவு செய்து மாவட்ட செயலாளர் எம்.முத்து உரையாற்றி னார். எம்.ராஜ்குமார் நன்றி கூறி னார்.

;