districts

img

அவிநாசியில் அரங்கேற்றிய அசிங்கமான அரசியல்

அவிநாசி, செப். 20 – அவிநாசி சட்டமன்ற தொகுதியில் இந்து  முன்னணியினர் வலுக்கட்டாயமாக கடை களை அடைக்கச் சொல்லி கடை உரிமையா ளர்களை மிரட்டி அராஜகத்தில் ஈடுபட்டு தங் கள் குறுகிய அரசியலை அரங்கேற்றினர். திமுக நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர்  ஆ.ராசா மனுதர்மம் குறித்து பேசியதை இந் துக்களைத் தவறாக பேசியதாக கூறி செப்டம் பர் 20ஆம் தேதி அவிநாசியில் கடையடைப் புக்கு இந்து முன்னணி அழைப்பு விடுத்தது. மக்கள் சந்திக்கும் பொருளாதார, வாழ்வா தாரப் பிரச்சனைகளில் கவனத்தை திசை திருப்பி அவர்களின் மத உணர்வைத் தூண்டி விட்டு அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடும்  குறுகிய நோக்கத்தில் இந்து முன்னணி இந்த  போராட்டத்தை நடத்த திட்டமிட்டிருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றஞ்சாட்டி யது. இந்த பின்னணியில் திமுக மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினர், பெரியார் , அம்பேத்கர் உள்ளிட்ட அமைப்பினர் உள் நோக்கத்துடன் இந்து முன்னணி நடத்தும்  கடையடைப்பு, வணிகர்களை அச்சுறுத்தும் நடவடிக்கை குறித்து காவல் நிலையங்களில் புகார் மனு அளிக்கப்பட்டது. அத்துடன் பொது மக்கள், வணிகர்களிடமும் இந்து முன்னணியின் இழிவான நோக்கத்தை வெளிப்படுத்தி துண்டறிக்கைகள் விநியோ கம் செய்யப்பட்டன. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை வழக்கம்போல  தேநீர் கடைகள், மளிகை கடைகள் திறக்கப்பட்டபோது இந்து  முன்னணி அமைப்பினர் 20க்கும் மேற்பட் டோர் கடைகளை அடைக்க நிர்பந்தம் செய்த துடன், கடைகளின் முன்புறம் வைத்திருந்த மளிகை பொருட்களை அவர்களே கடையின்  உள்ளே எடுத்து வைத்தனர். அத்துடன் வலுக் கட்டாயமாக கடைகளை அடைக்கும்படி கூறி னர். 

இதனால் செய்வதறியாமல் திகைத்த வியாபாரிகள் வேறு வழியில்லாமல் கடை களை அடைத்தனர். இதன் தொடர்ச்சியாக நம்பியாம்பாளையம் கிராமம் ஊட்டி மெயின்  ரோட்டில் அமைந்துள்ள திமுக பிரமுகர் லோகநாதனின் மளிகை கடை மற்றும் தேநீர்  கடைகளை அடைக்க இந்து முன்னணியி னர் வற்புறுத்தினர். ஆனால் இத்தகவல் அறிந்த திமுகவினர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துவிட்டு, லோகநாதன் கடைக்கு பாதுகாப்பாக சென்றனர். இதையடுத்து இந்து முன்னணியினர் பயந்து அங்ருந்து காலி செய்தனர். அதே போல ராமநாதபுரம் திமுக ஊராட்சிமன்ற உறுப்பினர் இளையராஜா  கருவலூரில் பூக்கடை நடத்தி வருகிறார். இக்கடை முன் பாக இ.மு., பாஜகவினர் இளையராஜா மற்றும் அவரது குடும்பத்தாரை ஆபாசமாக  பேசினர். இக்கடை அருகில் காவலர்கள் இருந்தும் அவர்களைத் தடுக்க நடவடிக்கை  எடுக்காத நிலையில், பூக்கடை அடைக்கப் பட்டது. அவிநாசி பேரூராட்சி பகுதியில் அன் னமயி உணவகம் கடையை அடைக்க இ.மு  அமைப்பினர் முற்பட்டபோது, சம்பவ இடத் திற்கு காவலர் வந்ததைத் தொடர்ந்து அவர் கள் அங்கிருந்து நழுவிச் சென்றனர்.

காவல் துறை பாதுகாப்புடன் கடை திறந்திருந்தது. பழங்கரை ஊராட்சிக்கு உட்பட்ட ரங்கா  நகர் பகுதியில் முடி திருத்தும் கடை கண் ணாடியை இந்து முன்னணி குண்டர்கள் உடைத்து எறிந்தனர். இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. கருவலூர் ஊராட்சி பகுதியில் ஆட்டோ ஸ்டாண்டில் இருந்து ஆட்டோவை எடுக்கும் படி அவர்கள் ரகளையில் ஈடுபட்டனர். இத னால் ஆட்டோ ஓட்டுநர்களும் ஆட்டோவை  எடுத்து வீட்டிற்கு சென்றனர். வணிகர்களுக்கு  காவல் துறையினர் போதிய பாதுகாப்பு அளிக்காததால் மிரட்டி அச்சுறுத்தி கடைய டைப்பு நடைபெற்றது. இந்நிலையில் அன்னூர் ஒன்றியத்தில்  அதிகாலை நேரத்தில் இந்து முன்னணியினர்  தேநீர் கடைகள், வணிகர்களை கடையடைக் கும்படி ரகளையில் ஈடுபட்டு கடை அடைக்க  வைத்தனர். இதன் பின்பு காலை 10 மணிக்கு  மேல் காவல்துறையினர் இந்து முன்னணி மற்றும் பாஜக அமைப்பி னர் கடைவீதிகளில் வந்து கொண்டிருந்த போது, 17 நபர்களை கைது செய்து தனியார்  திருமண மண்டபத்தில் அடைத்து வைத்த னர்.  பல பகுதிகளில் பெண் காவலர்கள் பாது காப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். சமூக விரோதிகள் வணிகர்களை அச்சுறுத்தி யபோது அவர்கள் தடுக்கும் நிலையில் இல் லாதது பரிதாபத்துக்குரியது. எனினும் பாஜக, இந்து முன்னணியின் இழிவான அரசி யல் நோக்கத்தை அவிநாசி மக்கள் உணர்ந்தே உள்ளனர்.

;