உடுமலை, மார்ச் 12- உடுமலை பேருந்து நிலைய விரிவாக்க வேலைகள் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் மெதுவாக நடைபெறுவதால் பழைய பேருந்து நிலையத்தில் கூட்ட நெரிசல் ஏற் படுவதால் பொது மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். உடுமலை மந்திய பேருந்து நிலையம் நகர மைய பகுதியில் கோவை – திண்டுக்கல் தேசிய நெடுச்சாலையில் அமைந்துள்ளது. இந்த பேருந்து நிலையம் கடந்த 1964 ஆம் ஆண்டு கட்டப்பட்டு பின் னர் 1996 ஆம் ஆண்டு விரிவாக்கம் செய்யப்பட்டது. விரிவாக்கம் செய் யப்பட்டு பல ஆண்டுகள் ஆன நிலையில், தற்பொழுது பயணிக ளின் மற்றும் பேருந்துகளின் எண் ணிக்கையும் அதிகரித்தால் பேருந்து நிலையத்தில் கடுமையான நெரிசல் ஏற்பட்டு வருகிறது. உடுமலை பேருந்து நிலையத்தில் தினமும் 300க்கும் மேற்ப்பட்ட பேருந்துகள் வந்து செல்கிறது. மேலும் இங்கு அண்டை மாநிலம் மூணார், பெங்க ளூர் ஆகிய பகுதிகளுக்கும், உடு மலை நகர பகுதியல் உள்ள பள்ளி, கல்லூரிக்கு வந்து செல்லும் மாண வர்கள், கோவை மற்றும் திருப்பூ ருக்கு வேலைக்கு செல்பவர்கள் மற் றும் கிராமப்புறங்களில் இருந்து வாரந்தோரும் திங்களன்று நடை பெரும் வாரசந்தைக்கு என்று இந்த பேருந்து நிலையத்தை பயன்படுத் தும் பொது மக்கள் கூட்ட நெரிசல் காரணமாக மிகவும் சிரம்படுகின்ற னர். மேலும், பேருந்து நிலையத்தின் உள்ளே கோவை, பொள்ளாச்சி பேருந்துகள் நிறுத்தப்படும் பகுதி குறுகலான பகுதியில் தான் கிழக்கு பகுதி கிராமங்களுக்கு செல்லும் பேருந்துகள் நிறுத்தப்படுகிறது. திருப்பூர் பேருந்துகள், நிலை யத்தை விட்டு வெளியே வரும் பழனி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது, எந்த பகுதிக ளுக்கு எந்த பேருந்துகள் செல்லும் என்று குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் தான் உடுமலை பேருந்து நிலையம் உள்ளது, இதானல் குறுக லான பேருந்து நிலையத்தை விரி வாக்கம் செய்து, கிராமப்புற பேருந் துகள் தனியாக நிற்கவும், நகர்ப்புற பேருந்துகள் நிற்க தனித்தனியாக பேருந்து நிலையம் அமைக்க வேண் டும் என்று பல ஆண்டுகளாக பொது மக்களால் கோரிக்கை வைக்கப் பட்டது.
மக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 2001 ஆம் ஆண்டு பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்ய பேருந்து நிலையத்தின் அருகிலி ருந்த வி.பி.புரம் பகுதியிலிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பேருந்து நிலைய விரிவாக்க வேலைகள் நடைபெற்று வேலை தற்பொழுது வரை முடிவுக்கு வர வில்லை. இதுகுறித்து பொது மக்கள் கூறுகையில், பேருந்து நிலைய விரி வாக்கம் வேலை தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலை யில் இன்று வரை வேலைகள் முடி வுக்கு வரமால் இருப்பது வேதனை யாக உள்ளது. இந்த பேருந்து நிலை யம் பழனி தேசிய நெடுச்சாலை மற்றும் உடுமலை புறவழி சாலைக ளுக்கு அமைத்து உள்ளதால் பேருந்து நிலையத்தில் இருந்து வெளியோ செல்ல சுரங்க பாதை அமைக்க வேண்டும். முறையாக பேருந்து நிலையத்தை சுத்தப்படுத் தாமல் இருப்பதால் அனைத்து இடங்களும் குப்பையாக இருப் பதை சுத்தம் செய்ய வேண்டும். மேலும் உள்ளூர் மற்றும் வெளியூர் பேருந்துகள் தனித்தனியாக நிற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என் றனர். நீண்ட நாள்கள் கிடப்பில் போடப் பட்ட பேருந்து நிலைய விரிவாக்க வேலைகள் தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலை யில் பேருந்து நிலைய விரிவாக்க வேலைகளை விரைத்து முடிக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.