திருப்பூர், அக். 5 - திருப்பூரில் சுதந்திர போராட்ட வீரர் தியாகி குமரன் 119 ஆவது பிறந்தநாள் அன்று தமிழக அரசு சார்பில் அமைச்சர் கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். வெள்ளையர் ஆட்சி காலத்தில் ஒத்துழையாமை இயக்கத் தில் ஈடுபட்டு, போலீசாரின் அடக்குமுறை தாக்குதலின்போது, தேசியக் கொடியை கீழே விடாமல் உயிர் நீத்த கொடி காத்த குமரனின் 119 ஆவது பிறந்த நாள் விழா அக்டோபர் 4ஆம் தேதி ஆகும். வாலிபர் சங்கம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க வடக்கு நகர கமிட்டி சார்பில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரி யாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் வடக்கு மாநகர கமிட்டி தலைவர் எஸ். கண்ணன், மாநகரச் செயலாளர் எஸ்.விவேக், வடக்கு மாநகர கமிட்டி உறுப்பினர்கள் சந்துரு, நவீன்குமார், மனோஜ்குமார், சீனிவாசன், சுபாஷ், பிரனேஷ், மாவட்ட குழு உறுப்பினர் பிர வீன், தெற்கு மாநகர கமிட்டி மௌனிஷ், குமரானந்தபுரம் கிழக்கு கிளை தலைவர் மெய்யப்பன் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
அமைச்சர்கள் மரியாதை திருப்பூர் ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள திருப்பூர் குமரன் நினைவிடத்தில் மாநில செய்தித் துறை அமைச்சர் சாமி நாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், மாவட்ட ஆட்சியர் வினீத், மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மற்றும் ஆணையாளர் கிராந்தி குமார் பாடி உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனைத்தொடர்ந்து, திருப்பூர் குமரன் வாரிசுதாரர்க ளுக்கு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வ ராஜ் ஆகியோர் பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்தனர். இவ்விழாவில், திருப்பூர் வருவாய் கோட்டாட்சியர் பண்டாரி நாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.