உடுமலை, டிச.10- உடுமலை அருகே கரடி தாக்கியதில் படுகாய மடைந்த இருவர் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வரு கின்றனர். உடுமலையை அடுத் துள்ள மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதியான ஈசல்திட்டு பகுதியில் வசிப்பவர் செந்தில் மற் றும் மகேஸ். இவர்கள் மலைப் பகுதியில் இருக் கும் சீமாறு பயிரை சேகரிக்க அருகிலுள்ள மலைப் பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது புதரில் மறைந் திருந்த கரடி ஒன்று திடீரென இவர்கள் மீது பாய்ந்து தாக்கியது. இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். இதைய டுத்து அவர்கள் எழுப்பிய கூச்சலை தொடர்ந்து சம் பவ இடத்திற்கு விரைந்து வந்த மலைவாழ் மக்கள் கரடியை அங்கிருந்து விரட் டினர். இதன்பின் கரடியின் தாக்குதலில் காயமடைந்த இருவரையும் மீட்டு, ஜல்லி பட்டி கொங்குரார் குட்டை வழியாக ஜல்லிபட்டி அரசு மருத்துவமைனக்கு சிகிச் சைக்காக கொண்டு சென்ற னர். இங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக் கப்பட்ட பிறகு உடுமலை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.